Vikram Audio Launch LIVE: ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட என் நண்பர் - விக்ரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்
Vikram Movie Audio Launch LIVE Updates: விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..

Background
Vikram Movie Audio Launch LIVE Updates
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட என் நண்பர் - விக்ரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்
ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட என் நண்பர். ஏன் இருக்க கூடாதா.. நானும் ரஜினியும் போட்டியாளர்களா இருக்கவில்லை.
“இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால்...” - விக்ரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்
இந்தி சுமாரத்தான் பேசுவேன். தமிழ் மொழிக்கு இடைஞ்சல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழை விட்டு கொடுத்து விடாதீர்கள்.





















