50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் ஏன்? விஜயகாந்தின் சுவாரஸ்ய பதில்..
"நடிகர்கள் சம்பளத்தை கேட்குறது கிடையாது. சம்பளத்தை நிர்ணயம் செய்வது வியாபாரம்."
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்த விஜயகாந்த் , தீவிர அரசியலில் இறங்கியதால் அதிலிருந்து விலகி இருந்தார். தற்போது உடல்நிலை காரணமாக தான் நிறுவிய தே.மு.தி.க கட்சியிலும் ஆக்டிவாக இல்லை. எந்தவொரு நடிகரை எடுத்துக்கொண்டாலும் விஜயகாந்தை புகழ் பாடாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் சங்கம் மூலம் பல நடிகர்களுக்கு உதவிகளை செய்து வந்தவர். இன்றும் விஜகாந்த் வீட்டில் சென்றோருக்கு விருந்தோம்பல் தடபுடலாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய்காந்த் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் இளம் நாயகிகளுடன் நடிப்பதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
View this post on Instagram
அதில்” பாண்ட் இருக்கிறாரே அவருக்கு 75 வயது, அவர் ஏன் ஹீரோயினோடு நடிச்சுட்டு இருக்காரு ? அவரை மக்கள் ரசிக்கவில்லை. கதாநாயகன் கதாநாயகி அப்படினு ரெண்டு கதாபாத்திரங்கள்தான். நான் வாசு இயக்கத்தில் , எஸ்.ஜே சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க தயார், நீங்க வாங்க தயாரானு ராமநாரயணன் சார் கிட்ட கேட்டேன். அதேதான் இப்போதும் கேட்கிறேன். நான் பழைய நாயகிகளோடு நடிக்க தயார். நீங்க பார்க்க தயாரா? ரசிகர்கள் விருப்பம் அப்படியாக இருக்கு அதுதான். படத்தில் பாடல் இல்லாமல் நடிக்க தயார். ஆனால் நான் படத்தில் இல்லாதது போல இருக்கிறது என்கிறார்கள். நடிகர்கள் சம்பளத்தை கேட்குறது கிடையாது. சம்பளத்தை நிர்ணயம் செய்வது வியாபாரம். ஒரு ஹீரோவின் படம் நல்லா ஓடினா, எல்லாரும் அந்த ஹீரோவையே போய் அணுகுவார்கள். ஹீரோ இல்லைங்க ..வேண்டாம்னு சொன்னா போதும் உடனே சம்பளம் இவ்வளவு தருகிறேன் நடிங்க என்பார்கள். தன்னிலை புரிந்த கதாநாயகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்வார்கள். நான் பல படங்களை தயாரிப்பாளராக எடுத்தியிருக்கிறேன். சில படங்கள் நஷ்டம் ஏற்பட்டியிருக்கிறது. சொக்கத்தங்கம் படத்தின் நஷ்டத்திற்கு நான் காரணம் என்றால் சொல்லிட்டு போங்க. படித்த நடிகர்களே இறப்புக்கான முடிவை எடுப்பதுதான் வேதனை“ என விஜயகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.