மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: கடைசியில் ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்.. இழுத்தடித்த எவிக்‌ஷன் ஷூட்டிங்.. இவர்தான் இந்த வார எலிமினேஷனாம்!

Bigg Boss 7 Tamil: கடைசி நிமிடத்தில் யுகேந்திரனுக்கு பதிலாக அதிரடி டிவிஸ்டாக வேறொருவர் வெளியேறி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Bigg Boss 7 Tamil: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் நாளே பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு வீட்டிற்கும் பிரிக்கப்பட்டு, சிறிய பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தால் சமையல் செய்ய வேண்டும், பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டன. 

பிக்பாஸ் வீட்டில் விதிமுறையை மீறிய விசித்ரா, பவா செல்லதுரை சிறிய பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையே, படிப்பு பற்றிய பேச்சில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசித்ராவிடம் கோபப்பட்டு ஜோவிகா கத்தி பேசியதை கமல்ஹாசன் கண்டித்த காட்சிகளும் இடம்பெற்றன. முதல் நாளே போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியது. 

இரண்டாவது வீட்டில் இருப்பவர்களில் யார் மிகக் குறைந்த ஒட்டுகளை பெறுகிறாரோ அவர் வெளியேற்றப்படுவார் எனக் கூறப்பட்டது. அந்த வகையில் யுகேந்திரன் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து பவா செல்லத்துரையும் அனன்யாவும் குறைந்த ஓட்டுகளைப் பெற்றனர்.

இதனால் முதலில் யுகேந்திரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் யுகேந்திரனுக்கு பதிலாக அதிரடி ட்விஸ்டாக அனன்யா வெளியேறி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. யுகேந்திரன் வெளியேறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக பவா செல்லதுரை தான் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், அவர் பாதுகாக்கப்பட்டு அனன்யா வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Bigg Boss 7 Tamil: கடைசியில் ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்.. இழுத்தடித்த எவிக்‌ஷன் ஷூட்டிங்.. இவர்தான் இந்த வார எலிமினேஷனாம்!

இந்த மாற்றங்களால் கமல் பங்கேற்ற எவிக்‌ஷன் ஷூட்டிங் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்றைய எபிசோடில், வன்முறையாக பேசியதால் விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்து கமல்ஹாசன் எச்சரிக்கும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த வார எவிக்‌ஷன் குறித்து போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டபோது பெரும்பாலானோரின் தேர்வாக பவா செல்லதுரை தான் இருந்தது. 

நடப்பு  சீசனில் மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பலரும் பங்கேற்றுள்ளனர். 

மேலும் படிக்க: Leo Movie: என்னது.. விஜய்க்கு ஓப்பனிங் சாங் இல்லையா.. பில்ட்-அப் இல்ல.. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் படம்!

Sridevi: ஸ்ரீதேவியின் சென்னை வீடு தான் எனக்கு எல்லாம்.. அங்க அவர பாத்துட்டு இருக்கேன்.. போனி கபூர் உருக்கம்!

 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget