Vijay tv baakiyalakshmi promo: கோபிக்கு அடுத்த ஆப்பு ரெடி.. பாக்கியலட்சுமியுடன் கைகோர்த்த மாமியார்..போடு மஜாதான்..!
எப்பொழுதும் பாக்கியலட்சுமிக்கு எதிராக நிற்கும் அவரது மாமியார் இன்றைய ப்ரோமோவில் பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனை எதிர்பார்க்காத இந்த சீரியல் ரசிகர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது. ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது.
தற்போது, பாக்கிய லட்சுமி சீரியலில் பரபரப்பான எபிசொடுகள் இந்த வாரம் ஓடி கொண்டு இருக்கிறது.இந்தநிலையில், இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி இன்று வெளியிட்டது. அதில், எப்பொழுதும் பாக்கியலட்சுமிக்கு எதிராக நிற்கும் அவரது மாமியார் இன்றைய ப்ரோமோவில் பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனை எதிர்பார்க்காத இந்த சீரியல் ரசிகர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
ப்ரோமோ :
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்த காலம் முதலே இந்த சீரியலின் கதாபாத்திரம் பாக்கியலட்சுமி ஏதாவது ஒரு தொழில் செய்து தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்.ஆனால், இதற்கு அவரது கணவர் கோபி மற்றும் மாமியார் ஏதாவது ஒரு குற்றம் சொல்லியும், பாக்கியலட்சுமியை மட்டம் தட்டியும் தவிர்த்து விடுகின்றனர்.
நன்றாக சமையல் செய்யும் பாக்கியலட்சுமிக்கு நீண்ட காலமாக சமையலில் தனக்கென ஒரு பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைத்து, மிளகாய் பொடி போன்றவற்றை தயாரித்தல், அக்கம்பக்கத்தில் வேலைக்கும் செல்லும் நபர்களுக்கு சமைத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்தார். இவருக்கு ஆதரவாக பாக்கியலட்சுமியின் இளைய மகன் எழில், அவரது மூத்த மகனின் மனைவி ஜெனி உதவியும் செய்கின்றனர்.
இதை பிடிக்காத கோபி ஏதோ பல காரணங்களை கூறி அவரை வீட்டு வேலைகளை மட்டும் செய்யும்படி கட்டளையிடுகிறார். இந்த நேரத்தில், கோபியின் தந்தை படியில் இறங்கி வரும்போது தவறி விழுந்து, கை,கால் இயங்காமல் போய் விடுகிறது. அப்பொழுது, மருத்துவமனையில் சேர்த்த கோபி லட்ச கணக்கில் செலவு செய்கிறார்.
அவரது தந்தையும் வீடு திரும்பிகிறார். பாக்கியலட்சுமி வீட்டின் நிலைமையை புரிந்துகொண்டு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று தனது கணவர் கோபியிடம் கோரிக்கை வைக்கிறார். ஆணாதிக்கம் கொண்ட கோபி கோவம் கொண்டு, நான்தான் இந்த குடும்பத்தை பார்த்துக்குறேன். நீ என்ன அப்படி செஞ்சுட்ட, உன் காசுலதான் இந்த வீட்டையே நடத்துற மாதிரி பேசுற என்று வீட்டில் சத்தம் போடுகிறார்.
அப்பொழுது, அமைதியாக இருந்த பாக்கியலட்சுமி, அப்ப இந்த வீட்டுக்கு நான் எதுவுமே செஞ்சது இல்லையா என்று கேள்வி கேட்க, அதற்கு கோபி அப்பாவ சரி செய்ய லட்ச கணக்குல செலவு பண்ணிருக்கேன் என்று செய்த காரியத்தை தன் தாய் முன்னே குத்தி காட்டுகிறார். அப்போ பாக்கியலட்சுமி, மெதுவா பேசுங்க அத்தை காதில் விழுகபோது என்று சொல்ல, ஓய் எல்லாத்துக்கும் இது கேட்கட்டும் என்று மிகவும் திமிரோட கர்ஜனை செய்கிறார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கோபியின் தாயார் தனது பீரோவில் இருந்த நகையை எடுத்துவந்து பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, நீ இந்த வீட்ல எவ்வளவு கஷ்டபடுற, உனக்கு எவ்வளவு செலவு இருக்கு எல்லாமே எனக்கு தெரியும். இந்தா இந்த நகையை பிடி என்று நீட்டுகிறார்.
கோபி உணர்ச்சி வசத்தில் அம்மா அம்மா என்று கண்ணீர் வடிக்க, இதையெல்லாம் கண்டுக்காமல் அவரது அம்மா சென்று விடுகிறார். தனது வீட்டில் தனக்கு இருந்த ஒரே ஆதரவான அம்மாவும் கோபிக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளது.பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளி தந்துள்ளது.
ஏற்கனவே, பாக்கியலட்சுமியை கழட்டிவிட பார்க்கும் கோபி, ராதிகாவை திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். இந்தநிலையில், கோபியின் அப்பாவை தொடர்ந்து அம்மாவும் கோபிக்கு எதிராக திரும்பியுள்ளார். இனி கோபியின் பாடு திண்டாட்டம்தான்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்