Watch Video: கும்கி போடுவாங்க.. பார்ப்பீங்க ரிப்பீட்டு... தன்னைத்தானே கலாய்த்துக்கொண்ட விஜய் டிவி
மற்றவர்கள் விஜய் டிவியை கலாய்த்து வந்த சூழலில் விஜய் சூப்பர்ல கும்கி போடுவாங்க.. பாப்பீங்க,, Repeatu என அவர்களை அவர்களே கலாய்த்துக்கொண்டதை அனைவரும் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சி நடந்துவருகிறது. இதை மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகைச்சுவை கலைஞர் அமுதவாணன் வருகை தந்திருந்தார். மாநாடு பட எஸ்.ஜே. சூர்யா கெட்டப்பில் வந்திருந்த அவர், வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என்ற மாநாடு படத்தின் பிரபலமான வசனத்தை கொஞ்சம் மாற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கலாய்த்தார்.
இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஜய் டிவி, “விஜய் சூப்பர்ல கும்கி போடுவாங்க.. பாப்பீங்க,, Repeatu” என்று குறிப்பிட்டுள்ளது.
விஜய் சூப்பர் ல கும்கி போடுவாங்க.. பாப்பீங்க,, Repeatu.. 😝
— Vijay Television (@vijaytelevision) December 19, 2021
ஸ்டார்ட் மியூசிக் Season 3 - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #StartMusic #VijayTelevision pic.twitter.com/SFTVuRYxBC
பொதுவாக ஒரு படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கிவிட்டால் வாராவாரம் அந்தப் படம் தவறாமல் ஒளிபரப்பப்படும். உதாரணத்திற்கு மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை அந்த சேனல் தொடர்ந்து ஒளிபரப்பும். குறிப்பாக கும்கி படத்தை கிட்டத்தட்ட அந்த சேனல் இதுவரை லட்சம் தடவைக்கும் மேல் ஒளிபரப்பியிருக்கும் என நெட்டிசன்கள் கூறுவதுண்டும்.
மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக தகவல் வெளியானதும், சமூக வலைதளவாசிகள், ‘இனிதான் உண்மையான டைம் லூப்பே’ இருக்கிறது என விஜய் டிவியை கலாய்க்கவும் செய்தனர்.
இந்நிலையில் மற்றவர்கள் விஜய் டிவியை கலாய்த்து வந்த சூழலில் விஜய் சூப்பர்ல கும்கி போடுவாங்க.. பாப்பீங்க,, Repeatu என அவர்களை அவர்களே கலாய்த்துக்கொண்டதை அனைவரும் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Top 10 Songs 2021 | எஞ்சாயி எஞ்சாமி To ஊ சொல்றியா மாமா.. 2021-ஆம் ஆண்டில் வைரலான டாப் 10 பாடல்கள்
Maharashtra : Gang War- ஆன நாய்- குரங்கு சண்டை! 250 நாய்களை தூக்கிவீசி கொன்ற குரங்குகள்