Thalapathy 69 : சன் பிக்ச்சர்ஸுக்கு புதிய சவால்...விஜயின் அடுத்த படம் எத்தனை கோடிக்கும் விற்பனை தெரியுமா?
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் 68 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தளபதி 69
ஒரு பக்கம் அரசியல் இன்னொரு பக்கம் சினிமா என இரு களங்களில் விளையாடி வருகிறார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முடித்த கையோடு தனது கடைசி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய். எச்.வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல் , பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், பிரியாமணி , மமிதா பைஜூ , நரேன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
முதற்கட்டமாக இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் நேற்று நவம்பர் 3 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. இந்த வருடத்தின் இறுதிவரை படப்பிடிப்பு தொடர இருக்கிறது. உரையாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
தளபதி 69 ஓவர்சீஸ் ரிலீஸ்
தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து இப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்கு விஜய் 270 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் தி கோட் , லியோ உள்ளிட்ட படங்களை வெளிநாடுகளில் விநியோகித்த பார்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க உரிமத்தை 78 கோடிக்கு வாங்கியுள்ளது. ஒரு தமிழ் நடிகரின் படம் இத்தனை பெரிய தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
சன் பிக்ச்சர்ஸூக்கு புது சவால்
இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் தமிழ் படங்களுக்கான மார்கெட் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் 32 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு 166 கோடி வசூல் செய்தது. அதே நேரத்தில் விஜயின் லியோ படம் 62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான தி கோட் படம் 53 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கமல் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படம் 63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஜினியின் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை 65 கோடிக்கு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக விலைக்கு விற்பனையான தமிழ் நடிகரின் படமாக கூலி திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தளபதி 69 படம் அந்த இடத்தை பிடித்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

