Phoenix Trailer : என்னடா பிரச்னை உங்களுக்கு.. நாங்க ஜெயிக்கவே கூடாதா.. ஆக்சனில் மிரட்டும் சூர்யா
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரம் இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா சிந்துபாத் படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்தார். அப்படம் நடிப்பிற்கான அறிமுகமாக சூர்யாவிற்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இயக்குநர் அவதாரம்
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய அனல் அரசு பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் ஸ்டண்ட் அமைத்து சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஆக்சன் காட்சிகளுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார். இந்நிலையில் பீனிக்ஸ் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் அனல் அரசு. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படம் முழுக்க வடசென்னை பகுதி மக்களின் கதை பிரதிபலிப்பதாகவே தெரிகிறது.
பீனிக்ஸ் பட டிரெய்லர்
சூர்யா சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. டிரைலரின் முதல் காட்சியே சிறுவர் சீர்திருத்த சிறையில் தொடங்குகிறது. இதில், ஒரு கொலையின் பின்னணியில் கைது செய்யப்படும் சூர்யாவை சிறைக்குள் வைத்து தீர்த்து கட்ட சம்பத், வரலட்சுமி ஆகியோர் திட்டமிடுகின்றனர். இதற்கு இடையில் குடும்பம் காதல், பாக்சிங் என பல கதைகளை பிரதிபலிக்கிறது. முழுக்க முழுக்க இப்படம் வடசென்னை பகுதி மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பது போன்றே எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
விளையாட்டில் அரசியலா?
பீனிக்ஸ் படத்தின் டிரைலரில் சூர்யா மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவராக இருக்கிறார். இவருக்கும் அரசியல் பின்புலமும், பண பலமும் கொண்ட அதிகாரம் கொண்டவர்களை எதிர்த்து சண்டை போடுவது போல் இருப்பதாகவே யூகிக்க முடிகிறது. மேலும், சூர்யா பேசும் இரண்டு வசனங்களும் தீப்பொறி மாதிரி இருக்கின்றன. நாங்க ஜெயிக்கவே கூடாது, நாங்க ஜெயித்தால் உங்களுக்கு என்னதாண்டா பிரச்னை என்றும் பேசுகிறார். இந்த வசனத்தை மிக கவனமாகவே பார்க்க வேண்டியுள்ளது. பாக்சிங் போட்டியில் நடக்கும் சண்டையை மையமாகவே வைத்தே இப்படத்தை அனல் அரசு இயக்கியிருப்பதாக தெரிகிறது.
எப்போது ரிலீஸ்?
பீனிக்ஸ் திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், சூர்யா முதல் படத்திலேயே செஞ்சுரி அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் தந்தையை மிஞ்சிவிட்டதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
Phoenix trailer here https://t.co/06F30TskMz
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) June 27, 2025
A @SamCSmusic Musical! @ActionAnlarasu @AkBraveman @suryaVoffcial @sakthifilmfctry @sakthivelan_b @varusarath5 @ActorMuthukumar #SampathRaj @harishuthaman #AbiNakshathra @VarshaViswanath @ActorDileepan @VelrajR





















