பாண்டியனிடம் இருந்து கணவரை காப்பாற்றிய மீனா! ரூ.10 லட்சம் கிடைத்தது எப்படி? உண்மையை கேட்டு உருகிய செந்தில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 517ஆவது எபிசோடில் மீனா தான் எப்படி 10 லட்சம் ரூபாய் ரெடி பண்ணினேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இப்போதுதான் பூகம்பம் வந்து ஓய்ந்திருக்கிறது. ரூ.10 லட்சத்தை வைத்து 2, 3 நாட்களை கடத்திவிட்டனர் என்றாலும் இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
அதாவது அரசி திருமணத்திற்காக பாண்டியன் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அரசு வேலைக்காக செந்தில் தனது மாமனாரிடம் கொடுத்துவிட்டார். கொடுப்பதற்கு முன்னதாக மீனாவிடம் கேட்ட போது, மீனாவோ திட்டிவிட்டு பணத்தை கொண்டு சென்று வங்கியில் போட சொன்னார். ஆனால், செந்தில் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு மீனாவின் அப்பாவிடம் கொண்டு சென்று கொடுத்துவிட்டார்.
அதன் பிறகும் மீனாவிடம் சொன்ன போது இதைப் பற்றி தனது மாமனாரிடம் கூறுவதாக சொன்னார். ஆனால், கடைசி வரை அவர் எதைப் பற்றியும் சொல்லவில்லை. இதற்கிடையில் தான் புதிய பிரச்சனையாக தங்களுக்கு கல்யாணத்திற்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது என்று கூறி அந்த பணத்தை திரும்ப கேட்டு பாண்டியனின் அக்காவும், மாமாவும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது பாண்டியன் பணத்தை தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்து செந்திலிடம் சொல்லி வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வர சொல்கிறார். ஆனால் செந்திலோ அப்படி, இப்படி என்று சொல்லி சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், பணத்திற்காக பல வழிகளில் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அப்பாவிடம் உண்மையை சொல்ல சென்ற செந்திலுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
மீனா தான் வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து வந்ததாக கூறி அந்த பணத்தை பாண்டியனிடம் கொடுத்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், எப்படி அவருக்கு ரூ.10 லட்சம் வந்தது என்று வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 517ஆவது எபிசோடில் தனக்கு பணம் எப்படி வந்தது என்பது குறித்து மீனா செந்திலிடம் கூறியுள்ளார்.
கதிர் கேட்ட போது தனது அப்பா அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார் என்று கூறிய மீனா, செந்தில் கேட்கும் போது மட்டும் உண்மையை வெளிப்படுத்தினார். தனக்கு இது போன்று பிரச்சனை வர போகிறது என்று முன்பே தெரியும். அதனால் நான் ஆபிஸில் லோனுக்காக முயற்சி செய்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் உடனே கிடைத்துவிட்டது. ஆனால், வட்டி தான் கொஞ்சம் அதிகமாக வரும் என்றார்.
அதற்கு அந்த வட்டி பணத்தை நான் கட்டுகிறேன் என்று செந்தில் கூற, அதற்கு மீனாவோ நானே கட்டிக்குறேன் என கூறுகிறார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

இதை தொடர்ந்து பாண்டியன் தனது மகன் கதிரை கடைக்கு வேலைக்கு வர சொல்ல அதற்கு கதிர் முடியாது என்றார். இதனால் பாண்டியனுக்கும், கதிருக்கும் இடையில் வாக்குவாதம் வருகிறது. கதிர் 4 பாடங்களில் ஃபெயிலான நிலையில் அதை படித்து திரும்ப எழுதி நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியன் கூற என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என திமிராக பேசுகிறார். மேலும், நீ வண்டி ஓட்டி சம்பாதிக்கிற பணத்தை விட கூடுதலாக நான் உனக்கு ரூ.100 தருகிறேன். நீ கடைக்கு வந்து வேலை செய் என கூறுகிறார். இதற்கிடையில் பாரு, உன்னுடைய அண்ணன் செந்தில் கடையில் தான் நிம்மதியாக, சந்தோஷமாக வேலை செய்வதாக கூற, அவர் சந்தோஷமாக இல்லை என்று கதிர் கூற அப்படியே வாக்குவாதம் முற்றுகிறது. பிறகு கோமதி தான் அவர்களை சமாதானம் செய்கிறார். கடைசியாக பாண்டியன் கடையில் இருக்க, செந்தில் மற்றும் பழனிவேல் இருவரும் தாமதமாக கடைக்கு வருகிறார்கள். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 517ஆவது எபிசோடு முடிவடைகிறது.





















