மேலும் அறிய
எம்.ஜி.ஆர் - சிவாஜியை வைத்து படம் எடுத்தவர்களுடன் விஜய் சேதுபதி கூட்டணி! இந்த காம்போ கூட நல்லா இருக்கே..
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் கூட்டணி சேரும் படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.

விஜய் சேதுபதி- நித்யா மேனன் - பாண்டிராஜ்
Source : social media
1950களில் தமிழ் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், தனுஷ் வரை பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் படத்தை குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளார்.
அதில் ஹீரோவாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க அவரின் ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார். டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். அதில் அவர்களின் காம்பினேஷன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர்கள் இருவரும் பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுத்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது அமைய உள்ளது.
சமீபத்தில் தான் 70வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் வெளியானது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்துக்காக நித்யா மேனன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக பெரிய பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதில் விரைவில் நித்யா மேனன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















