Vijay sethupathi | சீனியர் நடிகரை மதிக்க தெரிந்தவர் விஜய் சேதுபதி.. நெகிழ்ந்த ஜனகராஜ்
இதனை மேடையில் பகிர்ந்த இயக்குநர் மக்கள் செல்வன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி என கூறியுள்ளார்.
![Vijay sethupathi | சீனியர் நடிகரை மதிக்க தெரிந்தவர் விஜய் சேதுபதி.. நெகிழ்ந்த ஜனகராஜ் vijay sethupathi know how to respect seniors in set ssays actor janagaraj Vijay sethupathi | சீனியர் நடிகரை மதிக்க தெரிந்தவர் விஜய் சேதுபதி.. நெகிழ்ந்த ஜனகராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/c096d228f8fc33a76ccc7b9a10369981_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நானி பாலா இயக்கத்தில் ,ஜே.பி.ஜே.பிலிம்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒபாமா’ . இந்த படத்தில் பாண்டியராஜனின் மகன் பிரித்திவி பாண்டியராஜன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூர்நிஷா நடித்துள்ளார். மேலும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா என கோலிவுட்டின் பல முக்கிய பிரபலங்களும் ஒபாமா திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் கெஸ்ட் ரோலில் வந்து போகவுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக இயக்குநர் வேறு ஒரு முக்கிய நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்தாராம் இயக்குநர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் அந்த நடிகர் படத்திலிருந்து நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் வேதனையுடமும் குழப்பத்துடனும் இருந்த இயக்குநருக்கு தக்க சமயத்தில் ஐடியா கொடுத்திருக்கிறார் நடிகர் ஜனகராஜ். அதாவது படத்தின் அந்த முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார், அவரிடம் போய் கேளுங்கள் அவர் ஒப்புக்கொள்வார் என்றாராம்.
#Obama Featuring #PrithviPandiarajan as the lead man the film also has veteran comedian & character actor #Janakaraj in a crucial role. Actor @VijaySethuOffl who is doing a guest role in the film honoured #Janakaraj as a mark of respect. @bhuvanmanavai pic.twitter.com/J1Kle14ye6
— r.s.prakash (@rs_prakash3) December 19, 2021
உடனே இயக்குநரும் விஜய் சேதுபதியிடன் சென்று, படத்தின் கதையை சொல்லிவிட்டு , நடிகர் ஜனகராஜ் சார்தான் பரிந்துரை செய்தார் என்றிருக்கிறார். உடனே விஜய் சேதுபது கதைக்காக இல்லாவிட்டாலும் ஜனகராஜ் சாருக்காக நான் படத்தில் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
உடனே ஹாப்பியான இயக்குநர் நானி பாலா, ஜனகராஜிடம் எப்படி சார் அவர் ஒப்புக்கொள்வார் என உங்களுக்கு தெரியும் என கேட்டிருக்கிறார். அவர் 96 படத்தின் ஷூட்டிங் சமயங்களில் என்னுடன் பழகிய விதத்தையும் , கொடுத்த மரியாதையின் அடிப்படையில்தான் கூறினேன். சீனியர் நடிகரை மதிக்க தெரிந்தவர் தம்பி விஜய் சேதுபதி என பெருமிதம் தெரிவித்திருக்கிறார் ஜனகராஜ்இதனை மேடையில் பகிர்ந்த இயக்குநர் மக்கள் செல்வன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி என கூறியுள்ளார். பிரே. ம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம்தான் 96. இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் தங்கள் பள்ளி நாட்களோடு தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இதுதான் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அதில் ஒன்றுதான் பள்ளி வாட்ச்மேனாக வரும் ஜனகராஜின் கதாபாத்திரமும். என்னதான் சின்ன வயதில் ஸ்ட்ரிக்டான காவலாளியாக தெரிந்தாலும், நமக்கு பக்குவம் வந்தவுடன் அவர்களுக்குள் இருக்கும் வெகுளித்தனமும் பாசமும் வெளிப்படுவதை உணர்த்துவதாக இருக்கும் அந்த கதாபாத்திரம். படத்தின் மிகச்சிரிய போர்ஷனாக ஜனகராஜ் வலம் வந்தாலும் , அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காட்சிகள் மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கும் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)