Vijay Fans Meetup : கிடைத்த கேப்பில் ஆர்ப்பரித்த ரசிகர்...! அன்புடன் கைகாட்டிய விஜய்..! வைரலாகும் வீடியோ...
ரசிகர்களை சந்தித்த விஜய், ஒரு சின்ன செயலினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தது, இணையத்தில் காட்டு தீயாய் ட்ரெண்டாகி வருகிறார்
கேட் ஓட்டையில் இருந்து கை காட்டிய ரசிகருக்கு விஜயும் மரியாதையாக கை அசைத்து காட்டியுள்ளார். இணையத்தில் லீக்கான இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது
ரசிகர்களை சந்தித்த விஜய்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரசிகர்களை நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தார். அவ்வப்பொழுது குறிப்பிட்ட ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்த நிலையில், மாவட்ட வாரியாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்தார். விஜய் இந்த கூட்டத்திற்கு வெள்ளை நிற சட்டையில் வந்திருந்தார். இந்த கூட்டத்திற்கு நாமக்கல் சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இதர அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்துள்ளனர்.
View this post on Instagram
இந்த மூன்று மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கான ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அனுமதி அட்டை கொடுக்கப்பட்டு, அனுமதி அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருக்கும் ரசிகர்களை நேரடியாக, சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த வாரங்களில் பிற மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வைரலாகி வரும் வீடியோ
தலைவா 🤩🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏pic.twitter.com/uyQ2l9UUW7
— RamKumarr (@ramk8060) November 20, 2022
விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களின் கூட்டம், நடிகர் விஜயின் அலுவலகத்தில் நடந்த நிலையில், அனுமதி சீட்டு வாங்காத பல ரசிகர்களும் உறுப்பினர்களும் அலுவலகத்தின் கேட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் கேட்டின் ஓட்டையில் விஜய்க்கு கை அசைத்துள்ளார். அதற்கு விஜய், மரியாதை செலுத்தும் வகையில் பதிலுக்கு கை அசைத்து காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்