மேலும் அறிய

சாதி பற்றி பெரியார் பேசுனா சரி.. பார்த்திபன் பேசுனா தப்பா.. இயக்குநர் மோகன் ஜி கேள்வி!

உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சாதி பற்றி பேசினார். இது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றது. இப்படியான நிலையில் இயக்குநர் மோகன் ஜி பார்த்திபனுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.

உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சியில் தன்னுடைய சாதி குறித்து பார்த்திபன் பேசியது சர்ச்சையான நிலையில் அவருக்கு இயக்குநர் மோகன் ஜி ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கில் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள படம் “உஸ்தாத் பகத் சிங்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, ஸ்ரீலீலா இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். பார்த்திபன் வில்லன் ரோலில் இடம் பெற்றிருக்கிறார். இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தெலுங்கு மொழியில் தன் கருத்துகளை தெரிவித்தார். 

சாதி பற்றி பேசிய பார்த்திபன்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னுடைய பெயரை சொல்லி விட்டு நான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன் எனவும், சென்னையில் வளர்ந்ததால் தன்னால் முழுவதுமாக தெலுங்கில் பேச தெரியாது எனவும் கூறினார். படத்தின் வெற்றி விழாவில் நிச்சயமாக சரளமாக தெலுங்கில் பேசுவேன் எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. தமிழ்நாட்டில் புரட்சி பேசிவிட்டு அண்டை மாநிலத்திற்கு சென்றால் சாதி பெருமை பேசுகிறார்கள் என சகட்டுமேனிக்கு இணையவாசிகள் விமர்சித்தனர். 

ஆனால் இதற்கு பதிலளிக்கு வகையில், அதே நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், அந்த திரையுலகம் இல்லாவிட்டால் உங்கள் முன் நானில்லை என தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ச்சியாக பார்த்திபனை விமர்சித்தனர். 

ஆடியோ மூலம் மன்னிப்பு

இந்த  நிலையில் ஆடியோ மூலம் பார்த்திபன் தன் பேச்சால் யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்குமாறு கூறியிருந்தார். அதில் என் தாய்மொழி தெலுங்கு தான் என்றாலும், நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு தான் என பேசியிருந்தார். இப்படியான நிலையில் பார்த்திபன் பேச்சை குறிப்பிட்டு பிரபல இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதைதான் பெரியாரும் செய்தார், சொன்னார்.. அவரை மட்டும் கொண்டாடும் இந்த தமிழ் சமூகம் இவரை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்.. தமிழ்நாட்டில் நம்மை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் பாதிக்கும் மேல் தமிழர் அல்லாதவர்கள், சாதியை தூக்கி பிடிப்பவர்கள் தான்.. இப்ப மட்டும் என்ன குதிக்கிறானுங்க” என தெரிவித்துள்ளார். 

இதேபோல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது பதிவில், “நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தான் யார் ,தன் வேர் எது என்பதை மறவாமல் இருக்கும் இயக்குனர் பார்த்திபன் அவர்களின் தெலுங்கு மொழிப்பற்று பாராட்டுக்குரியது . தன் அடையாளத்தை மறைக்காமல் வெளிப்படுத்தும் அவரைப் போல அனைவரும் அவரவர் தாய்மொழிக்கும், இனத்திற்கும் உண்மையும் நேர்மையும் இருத்தால் நல்லது" என ஆதரவு தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget