மேலும் அறிய

Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?

New Renault Duster 2026 Price: ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் கார் மாடலின் தொடக்க விலை, இந்திய சந்தையில் 10 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் கார் மாடல் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் கம்பேக் - விலை அறிவிப்பு | New Renault Duster 2026 Price

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலான டஸ்டர், 4 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டுஜ் உள்ளூர் சந்தையில் கம்பேக் கொடுத்துள்ளது. இந்திய சந்தையில் தனது வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் ப்ராண்டுக்கு இந்த கார் மாடல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன்படி, போட்டித்தன்மை மிக்க வகையில் டஸ்டரின் தொடக்க விலையானது, 10 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு வெறும் 10 லட்சத்து 29 ஆயிரத்துக்கே விற்பனை செய்யப்பட உள்ளது. காரின் டாப் ரேஞ்ச் வேரியண்டின் விலை 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதர்களுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையில் இந்த கார் குறைந்த விலையில் கிடைக்கிறது.

டஸ்டர் - ஹைப்ரிட் எடிஷன் விநியோகம் எப்போது?

ரூ.21 ஆயிரம் என்ற கட்டணத்துடன் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.  பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 160hp டர்போ பெட்ரோல் இன்ஜின் எடிஷனை தேர்வு செய்துள்ளனராம். இவற்றின் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதேநேரம், பெருநகரங்களில் காரின் ஒட்டுமொத்த தேவையில் 40 சதவிகிதம், ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனாக இருப்பதகாவும் ரெனால்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து ஹைப்ரிட் வேரியண்ட்களும் விற்று தீர்ந்து விட்டதாகவும், உற்பத்தி தொடர்பான புதிய தகவல்கள் தீபாவளியின் போது தொடங்கும் விநியோக நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் ரெனால்ட் தெரிவித்துள்ளது. 


Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?

ரெனால்ட் டஸ்டர் வேரியண்ட்களுக்கான விலை விவரங்கள் | New Renault Duster 2026 Variants

இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டரானது 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதெண்டிகோ, எவல்யூசன், டெக்னோ/டெக்னோ+ மற்றும் ஐகானிக் ஆகிய வேரியண்ட்கள் அடங்கும். பெரும்பாலான வேரியண்ட்களில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் கிடைக்கும். 

வேரியண்ட்
 
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT
1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT
1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT
1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT
1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT
அதெண்டிக்
 
10.49 லட்சம்
10.29 லட்சம்
–
–
–
–
எவல்யூசன்
 
11.69 லட்சம்
11.39 லட்சம்
12.99 லட்சம்
12.69 லட்சம்
14.49 லட்சம்
13.99 லட்சம்
டெக்னோ
 
13.49 லட்சம்
13.19 லட்சம்
14.49 லட்சம்
14.19 லட்சம்
15.89 லட்சம்
15.49 லட்சம்
டெக்னோ+
 
–
–
15.29 லட்சம்
14.99 லட்சம்
16.69 லட்சம்
16.29 லட்சம்
ஐகானிக்
 
–
–
16.99 லட்சம்
16.59 லட்சம்
18.49 லட்சம்
18.09 லட்சம்

ரெனால்ட் டஸ்டர் - வாரண்டி, கேரண்டி அம்சங்கள்

புதிய எஸ்யுவி ஆன டஸ்டருக்கு ரெனால்ட் நிறுவனம் சந்தா செலுத்தி பெறக்கூடிய புதிய சப்ஸ்க்ரிப்ஷன் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் இந்த சலுகை மூலம், சாலை மற்றும் சேவை வரிகள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கி, முன்பணமே இன்றி காரை பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஒரே மாதாந்திர கட்டணத்தில் சேர்க்கப்படும்.  இதுபோக பலதரப்பட்ட தவணைக்காலம் மற்றும் மைலேஜிற்கான கேரண்டி ஆப்ஷன்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். தவணைக்காலம் முடியும் போது  சந்தாவை நீட்டிக்கலாம், வாகனத்தைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லது அதை சொந்தமாக வாங்கிக்கொள்ளலாம். 


Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?

வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவை பேணும் விதமாக டஸ்டருக்கு 7 ஆண்டுகால வாரண்டியை ரெனால்ட் நிறுவனம் அள்ளிக் கொடுத்துள்ளது. வாரண்டி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் என்றும், காரை வேறொரு நபருக்கு விற்கும்போதும் வாரண்டி அப்படியே மாற்றிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுவிற்பனையின் போது கார் வலுவான மதிப்பை கொண்டிருக்கும்.

ரெனால்ட் டஸ்டர் - இன்ஜின் ஆப்ஷன்கள் | New Renault Duster Engine Options

புதிய ரெனால்ட் டஸ்டரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ என இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் முதலாவது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ், இரண்டாவது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. கூடுதலாக 1.8 லிட்டர் வலுவான ஹைப்ரிட்  பெட்ரோல் பவர்ட்ரெயின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget