மேலும் அறிய

’அமைதியால் உருவான அசுரன்’ - விஜய் எனும் சாம்ராட் உருவெடுத்த கதை..!

”சின்ன வயதில் துறுதுறு என்று இருந்த விஜய்யை, தலைகீழாக மாற்றிய நிகழ்வு தங்கை வித்யாவின் இறப்பு. அந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் அப்படியே அமைதியாகிவிட்டார். சத்தமாக பேசுவதை கூட நிறுத்திவிட்டார்” என்று கூறினார் அவரது தாய் ஷோபா..

தமிழ்சினிமாவின்  ‘பாக்ஸ் ஆபிஸ்’ கிங் என்று அழைக்கப்படும் விஜய் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளில் கால்பதிக்கிறார். இது மட்டும் ஊரடங்கு காலமாக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அத்துனை திரையரங்குகளும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். சரவெடிகள் ஒரு பக்கம் பரபரக்க, மேளதாளங்களின் ஓசை விண்ணைப்பிளந்திருக்கும்.

‘தளபதி’ என்ற ஒற்றை சொல் எத்தனை கோடி முறை ஒலித்திருக்குமோ தெரியாது. தமிழ் சினிமாவில் இவர் ஒருத்தர் மட்டும்தான் நடிக்கிறாரா என்ன? இவருக்கு மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டங்கள் என்ற கேள்வி எழலாம். ஆனால் எதுவும் இங்கு காரண காரியம் இன்றி நடப்பதில்லை. தமிழ்சினிமாவில் ஒரு ஹீரோ 10 வருடங்களுக்கு மேல் தாக்குபிடிக்கிறார் என்றால் படங்களை தாண்டி அந்த நடிகரிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயம் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

’அமைதியால் உருவான அசுரன்’ - விஜய் எனும் சாம்ராட் உருவெடுத்த கதை..!

அந்த ஒற்றை அர்த்தம்தான் சம்பந்தப்பட்ட நடிகர் தோல்விகளை சந்திக்கும் போதும், அவமானங்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை அவரது பக்கம் இருக்கச் செய்யும். ஆனால் அதனை அந்த நடிகர் உருவாக்க முடியாது. அது இயல்பிலேயே இருக்க வேண்டும். அப்படி ஒரு இயல்பு விஜய்க்கும் இருந்தது. அதுதான் அவரது அமைதி.   அந்த ஒற்றை உழியை வைத்து விஜய் எழுப்பிய கோட்டைதான் இன்று தமிழ்சினிமாவின் சாம்ராட்டாக விஜயை நிற்க வைத்திருக்கிறது.  சின்ன வயதில் துறுதுறு என்று இருந்த விஜய்யை, தலைகீழாக மாற்றிய நிகழ்வு தங்கை வித்யாவின் இறப்பு. “அந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் அப்படியே அமைதியாகிவிட்டார். சத்தமாக பேசுவதை கூட நிறுத்திவிட்டார்” என்று அவரது தாயார் ஷோபா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார். 

’அமைதியால் உருவான அசுரன்’ - விஜய் எனும் சாம்ராட் உருவெடுத்த கதை..!

அதன் பின்னர் விஜய் மீது யாருக்கும் பெரிய அபிப்ராயம் கிடையாது. விஜய்யா.. அவனுக்கு என்ன... அவன் உண்டு.. அவன் வேலை உண்டுனு இருப்பான் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும். சின்ன வயதில் இருந்தே சாந்த சொரூபன் எனற பெயரை சம்பாதித்த விஜய் திடிரென்று தனது தந்தையிடம் வந்து நான் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்போது எல்லோரையும் போலதான் சந்திர சேகரும் நீ ஒழுங்காக பேச கூட மாட்டாய்... நீ எப்படி சினிமாவில்... என தயங்கினார்..  ஆனால் விஜய் விடுவதாக இல்லை... நான் நடித்தே தீர வேண்டும் டாட்.. என்று அடம் பிடிக்க பெரும் பிரளயத்திற்கு பிறகு  எஸ்.ஏ.சியிடம் இருந்து சம்மதம் கிடைத்தது. 

ஆசைப்பட்டுட்ட சரி ஏதாவது நடித்துக்காட்டு என்று கூறிய எஸ்.ஏ.சியும் விஜய்க்கு இப்படி ஒரு முகம் இருக்குமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்  “ ரஜினியின் அண்ணாமலையில் இருந்து ஒரு சீனை விஜய் நடித்து காட்ட எஸ்.ஏ.சி வாயடைத்துப் போனார்.   அந்த அமைதிப்பிரளயம் அப்படிதான் தனது பயணத்தை தொடங்கியது. ‘நாளைய தீர்ப்பும்’ உருவானது. தந்தையின் தோளைப்பிடித்து வந்ததால், தமிழ் சினிமா அவர் மீது கல் எரியாமல் இல்லை.. ஆரம்பகாலக்கட்டங்களில் விஜய் மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்..

’அமைதியால் உருவான அசுரன்’ - விஜய் எனும் சாம்ராட் உருவெடுத்த கதை..!

விவரம் புரியாத வயது என்றாலும் அவை அனைத்தையும் தனது ‘ அமைதி’ கொண்டே சமாளித்தார் விஜய். வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய்க்கு  ‘ரசிகன்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்து விட விஜய் ‘இளைய தளபதி’ விஜய் என்று மாற்றம் கண்டார். ‘பூவே உனக்காக’ நல்லப் பெயரை பெற்றுத் தந்தாலும் அதற்கு அடுத்தப்படங்கள் அவருக்கு தோல்விகளையே கொண்டுவந்தன இருப்பினும் அவர் கடுமையாக உழைத்தார்... மன்னிக்கவும் அமைதியாக உழைத்தார்.  பின்னர் வந்த  ‘லவ் டுடே’ நல்ல வெற்றியை பெற விஜய் பிக் அப் ஆக ஆரம்பித்தார்.

தொடர்ந்து வந்த  ‘துள்ளாத மனமும் துள்ளும்’  ‘மின்சாரக்கண்ணா’ ‘குஷி’  ‘பிரியமானவளே’ உள்ளிட்ட படங்கள் விஜயை அனைவருக்கும்  பிடித்த கமர்ஷயல் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் ‘திருமலை’ ‘கில்லி’ உள்ளிட்ட படங்களில்  அவர் கையில் எடுத்த ஆக்‌ஷன் அவதாரமும்.. தங்கச்சி சென்டிமெண்டும் அவரை தமிழகத்தின்  ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் சென்று  சேர்த்து விட்டது. அப்போது அவர் கொடுத்த நேர்காணல்களிலும் சரி, பிரஸ் மீட்களிலும்  வெளிப்பட்ட விஜயின் அமைதி... இவரா இவ்வளவும் பண்றார் என்ற பிரமிப்பை திரைப்பிரபலங்களிடம், ரசிகர்களிடமும் ஏற்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு வெளியான  விஜய்க்கு ‘போக்கிரி’பெரிய வெற்றியை பெற்றுத்தந்தாலும் ‘ வில்லு’ ‘அழகிய தமிழ் மகன்’ ‘ குருவி’ உள்ளிட்ட படங்கள் அவரை தோல்வியின்  பாதைக்கு அழைத்து சென்று விட்டன. மீள முடியாமல் இருந்த விஜயை ‘காவலன்’ சிறு ஆறுதலாக அமைந்தது. 

’அமைதியால் உருவான அசுரன்’ - விஜய் எனும் சாம்ராட் உருவெடுத்த கதை..!

அப்போது விஜய் கொடுத்த ஒன்றில் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்பார் “ இப்படி அமைதியாக இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்குது”  அதற்கு விஜய் “ இது என்ன பண்ணும்னு எனக்கு தெரியல.. ஆனால் இத வச்சு நிறைய விஷயங்களை சாதித்திருக்கிறேன் என்று கூறினார்..  ஆம் அதை வைத்து பின்னர் அவர் சாதித்துக்காட்டியது எல்லாம் வரலாறு.. அதன் பின்னர் விஜய் நடித்த  ‘நண்பன்’ ‘ துப்பாக்கி’ ‘ கத்தி’  ‘மெர்சல்’ ‘பிகில்’ ‘மாஸ்டர்’  படங்கள் எல்லாம் எகிடுதகிடு கிட்ஸ். 

‘காவலன்’ ‘துப்பாக்கி’  ‘தலைவா’ படங்கள் பிரச்னையை சந்தித்த போது கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அமைதியாக அத்துனை காய்களையும் நகர்த்தினார் விஜய்..  அவர் சொன்னது போலவே நெகட்டிவிட்டி அமைதியாக அவரை விட்டு நகர்ந்தது. ரஜினியிடம் ஒரு முறை உங்களிடம் விஜயிடம் பிடித்தது என்ன என்று கேட்க.. அவர் கூறிய பதில்  ‘விஜயோட அமைதி’  தனது கையால் விஜய்க்கு விருது கொடுத்த கமலும்  ‘ விஜய் உழைக்கிறது பிடிக்கும் அமைதியா உழைக்கிறது’ இன்னும் பிடிக்கும் என்றார்... விஜயின் அமைதிக்கு இன்னொரு பக்கபலம்.. அவரின்  ஆடைகள். (மாஸ்டர் ஆடியோ லான்ச் விதிவிலக்கு). அந்த அமைதிதான் விஜயை நடிகர் என்பதை தாண்டி ஒரு உணர்வாக விஜய் ரசிகர்களின் மனதில் அவரை ஆழப்பதித்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக விஜய் அமைதியில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது.  “ஸ்பீடா போன கவனம் மஸ்ட் நண்பா...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.