Beast Movie Ticket: அசுர வேகத்தில் விற்று தீர்ந்த பீஸ்ட் டிக்கெட்டுகள்.. மெர்சல் காட்டும் விஜய் ரசிகர்கள்..!
பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பீஸ்ட் படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துள்ளன.
பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப்படத்திற்கான டிக்கெட்டுகள் விறுவிறுவென புக் ஆகிவருகின்றன
View this post on Instagram
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள ‘பீஸ்ட்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்தப்படத்திற்கான முதல்காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் விற்றுத்தீர்ந்துள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அண்மையில் படத்திலிருந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்