மேலும் அறிய

Viduthalai 2: 'குமரேசன் ரெடி' .. விடுதலை இரண்டாம் பாகத்துக்கு தயாரான சூரி.. வைரலாகும் வீடியோ..!

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டதாக நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டதாக நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விடுதலை முதல் பாகம் 

 தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு பிறகு, ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை இயக்கினார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி ரிலீசானது. விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்த நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். 

மேலும் இந்த படத்தில்  பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. 

மேலும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் காட்சிகள் அடுத்த பாகம் பற்றிய அறிமுகத்தில் இடம் பெற்றுள்ளதால் எப்போது விடுதலை படம் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தின்  தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 
இதற்கிடையில் விடுதலை படத்தின் முதல் பாகம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. இதில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. 

விடுதலை 2ஆம் பாகம் 

விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சில காட்சிகள் மட்டுமே விஜய் சேதுபதி வந்திருப்பார். இரண்டாம் பாகம் முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. இதில் போராளியாக அவர் எப்படி உருவாகினார்?, மக்கள் பிரச்சினைக்காக போராடிய அவருக்கு நியாயம் கிடைத்ததா? என்பது கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ள அவரின் கேரக்டருக்காக சிகை அலங்காரம் செய்து, காக்கி உடையுடன் ஷூட்டிங்கிற்கு செல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget