Viduthalai: வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான விடுதலை படத்தின் முக்கிய அப்டேட்.. ஹார்ட் விடும் ரசிகர்கள்..
இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
இயக்குநர் வெற்றி மாறன் பிறந்தநாளில் அவர் இயக்கி வரும் விடுதலை படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது.
View this post on Instagram
படத்திற்காக சூரி செய்யும் கடுமையான வொர்க் அவுட் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதியும், சூரியும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளளார்.அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார்.
View this post on Instagram
இதனிடையே சில தினங்களுக்கு முன் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.