Laandher Trailer: மிரள வைக்கும் சைக்கோ த்ரில்லர்... விதார்த் நடிக்கும் 'லாந்தர்' படத்தின் ட்ரைலர் இதோ!
Laandher Trailer : நடிகர் விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
![Laandher Trailer: மிரள வைக்கும் சைக்கோ த்ரில்லர்... விதார்த் நடிக்கும் 'லாந்தர்' படத்தின் ட்ரைலர் இதோ! Vidaarth starring Laandher official trailer released now Laandher Trailer: மிரள வைக்கும் சைக்கோ த்ரில்லர்... விதார்த் நடிக்கும் 'லாந்தர்' படத்தின் ட்ரைலர் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/e7af87d25cba0ba78aeed7604c3abad71718715822688224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகன் விதார்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாந்தர்'. சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நாயகனாக விதார்த் நடிக்க ஸ்வேதா டோரதி, சஹானா, விபின், பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு பணிகளை ஞான சௌந்தர் செய்ய, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார். எம்.எஸ்.பிரவீன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
வரும் ஜூன் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் அபிஷியல் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்தடுத்து கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விதார்த். அந்த சைக்கோ கொலைகாரனுக்கு விதார்த் மனைவிக்கும் ஏதோ ஒரு வித சம்பந்தம் இருப்பது போல உள்ளது. இந்த தொடர் கொலைக்கு பின்னணியில் பிளாஷ்பேக் ஸ்டோரி இருக்கும் என கணிக்கப்படுகிறது.
சைக்கோ த்ரில்லர் படங்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரே பரபரப்பை ஏற்படுத்தி படம் குறித்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)