மேலும் அறிய

Vidaamuyarchi Boxoffice: வந்தாச்சு வீக் எண்ட்..! 2 நாட்களில் கல்லா கட்டியதா விடாமுயற்சி? அஜித் படத்தின் மொத்த வசூல் நிலவரம்

Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல்,  இரண்டாவது நாள் கடும் சரிவை சந்தித்துள்ளது.

விடாமுயற்சி இரண்டாவது நாள் வசூல் நிலவரம்:

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா, உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  இந்த திரைப்படம் அதன் இரண்டாவது நாளின் முடிவில் இந்தியாவில் மொத்தமாக சுமார் ரூ.32.12 கோடி நிகர வசூல் செய்துள்ளது. அதன்படி, முதல் நாள் வசூலை காட்டிலும், விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. முதல் நாளில் இந்த திரைப்படம், தமிழில் 25.5 கோடி ரூபாய், தெலுங்கில் 0.5 கோடி ரூபாய் என மொத்தம் 26 கோடி ரூபாயை வசூல் செய்தது. ஆனால், இரண்டாவது நாளில் இப்படம் அதிகபட்சமாகவே வெறும் 8 கோடி ரூபாய் வரை மட்டுமே, தமிழ்நாட்டில் வசூலித்துள்ளதாக தெரிகிறது.

உலகளவில் விடாமுயற்சி வசூல்:

தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் விடாமுயற்சி படத்தின் வசூல் இரண்டாவது நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.சர்வதேச அளவிலும் இதே சூழல் நிலவுவதாகவே தெரிகிறது. அதன்படி, இரண்டாவது நாள் முடிவில், தேசிய அளவில் 34 முதல் 35 கோடி ரூபாயும், சர்வதேச அளவில் 62.45 கோடி முதல் 63.45 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். முதல் நாளிலேயே இப்படம் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படும், நிலையில் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் சுமார் 60 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Erode East By Election Result LIVE: ஈரோட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை! சூரியன் உதிக்குமா? மைக் ஒலிக்குமா?

மீண்டு வருமா விடாமுயற்சி?

முதல் இரண்டு நாட்களும் வேலைநாட்கள் என்பதால், படத்தின் வசூல் சரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்பது திரைத்துறையினரின் கருத்தாக உள்ளது. இன்று முதல் வார இறுதி தொடங்குவதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகாவே லைகா நிறுவனம் சார்பில் வெளியான படங்கள், பெரிய வெற்றி எதையும் ஈட்டவில்லை. அந்த சூழலை விடாமுயற்சி மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளதால், லைகா நிறுவனத்தின் நிதிநிலை மேலும் மோசமாகலாம் என கூறப்படுகிறது.

விடாமுயற்சி கதைக்களம்

திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ அஜித்தும், த்ரிஷாவும் முடிவு எடுக்கின்றனர். அதற்காக த்ரிஷாவை அவரது வீட்டில் விடுக்க செல்லும்போது, அவர் கடத்தப்படுகிறார். இதையடுத்து தனது மனைவியை அஜித் மீட்டாரா? இல்லையா? அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் ஒன்லைன். பெரும் இடைவெளிக்குப் பிறகு வெளியான விடாமுயற்சி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget