மேலும் அறிய

Rajinikanth : மனசிலாயோ பாடல் ஹிட்க்கு அனிருத் மட்டும் காரணமில்லை..நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

வேட்டையன் மனசிலாயோ பாடலுக்கு அனிருத் மட்டும் காரணமில்லை நடன கலைஞர் தினேஷ் மாஸ்டருன் பெரிய காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி  , ரக்‌ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது குறித்து பேசினார்.

தினேஷ் மாஸ்டரை பாராட்டிய ரஜினி

" நாங்கள் படம் எடுத்து முடித்துவிட்டோம் இனிமேல் நீங்கள்தான் பார்த்து சொல்லவேண்டும். வேட்டையன் ஆடியோ லாஞ்சு ரொம்ப நன்றாக நடந்தது. ஆனால் நிகழ்ச்சிகான பாஸ் நிறைய பேருக்கு வரவில்லை என்று தகவல் வந்தது. அடுத்த முறை இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம். இவ்வளவு பெரிய நடிகர்களை இப்படத்தில் நடிக்கவைத்து அவர்களின் கால்ஷீட்டை மேனேஜ் செய்ததற்கு எக்சிகியூட்டிவ் ப்ரோட்யூசர் தமிழ் குமரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  வேட்டையன் மனசிலாயோ பாடல் இவ்வளவு பெரிய ஹிட் ஆனதற்கு அனிருத் மட்டும் காரணமில்லை. டான்ஸ் மாஸ்டர் தினேஷூம் தான். இந்த மாதிரியான எளிமையான ஸ்ட்டெப்ஸ் வைத்து பாடலை ஹிட் ஆக்குவது அவ்வளவு எளிதானது இல்லை. அடுத்தபடியாக பாடலை எழுதிய சுப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் ஆகிய இருவரும் முக்கிய காரணம். " என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் கூலி. இப்படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைதராபாதில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின் சென்னையில் நடைபெற்றது. தற்போது விசாகபட்டினம் ஹார்பரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget