Vetrimaran: 'விடுதலை' பட டயலாக் நிச்சயம் இது தளபதிக்கு இல்ல! அப்போ யாரை குறி வைத்தார் வெற்றிமாறன்?
'விடுதலை' படத்தில் இடம்பெற்ற வசனம், தளபதியை குறிவைத்து வெற்றிமாறன் ட்ரைலரில் ஒரு டயலாக் வைத்ததாக கூறப்படும் நிலையில், அதன் பின்னணி பற்றி பார்ப்போம்.
இயக்குநர் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் தான் இயக்கிய எல்லா படங்களையுமே ஹிட் கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று இவர் கை வச்ச எல்லா படங்களுமே மாஸ் ஹிட். கடந்த ஆண்டு சூரியை ஹீரோவாக வைத்து 'விடுதலை' முதல் பாகத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி விடுதலை படம் எடுக்கப்பட்டது.
விடுதலை 2
கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு சில விமர்சனங்களும் எழுந்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் மக்கள் படை தலைவராகவும் ஒரு போராளியாகவும் நடித்திருந்தார். அவரை எல்லோருமே வாத்தியார் வாத்தியார் என்றே அழைத்தனர். கடைசியாக விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டதோடு படம் முடிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் 2ஆம் பாகமும் உருவாகியிருக்கிறது.
இதில் ஏன் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டார்? அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது? அவர் ஏன் போராட்டக்காரராக உருவெடுத்தார் என்பது போன்ற காட்சிகளை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். அதாவது விடுதலை படத்தின் ப்ரீகியூவலாக இப்படம் உருவாகி உள்ளது. இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சரவண சுப்பையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை 2 படத்தின் டிரைலர்
இந்த நிலையில் தான் விடுதலை 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், விடுதலை 2 டிரைலர் வெளியானது முதல் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த டிரைலரில் இடம் பெற்ற எந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தாத நிலையில், விஜய் சேதுபதி பேசிய டயலாக் தான் சர்ச்சையாகி வருகிறது.
தளபதியை தாக்கினாரா வெற்றிமாறன்?
அதாவது, தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்று கூறியிருப்பார். இதையும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்து விஜய்யும் வைத்து இப்போது புதிய சர்ச்சை. அதாவது, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு எந்த வித அரசியல் தத்துவமும் கிடையாது ஒன்னும் கிடையாது என்று அவரை மறைமுகமாக வெற்றிமாறன் சாடியிருப்பதாக விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
உண்மை இதுதான்:
ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்கிற உண்மை தெரிந்த சினிமா வட்டாரம். அதாவது இந்த படத்தின் கதை 1960 to 1980 வரை நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வசனம் விஜயை குறிப்பிட்டு கூற வாய்ப்பே இல்லை. மாறாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் MGR அவர்களை குறிப்பிட்டு எழுதிய வசனம் என்றே பார்க்க படுகிறது. முதல் பாகத்திலும் எம்.ஜி.ஆரை சாடி ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்களை வெற்றிமாறன் மறைமுகமாக வைத்திருப்பார். அதன் தொடர்ச்சியும், வெளிப்பாடும் தான் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாக தன்னுடைய படங்களில் கையாள கூடிய, வெற்றிமாறன் ஏன்? இப்படி பட்ட வசனத்தை வைத்தார் என்பதை படத்தை பார்க்கும் போது தான் தெரியவரும். மேலும் ட்ரைலரை பார்க்கும் போதே... இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.