‛டேய் சண்டாளா...’ மறக்க முடியாத வசனம்... மறைக்க முடியாத கலைஞன் வி.எஸ்.ராகவனின் நினைவு தினம் இன்று!
V.S.Raghavan : யாருக்குத் தான் திரையில் தோன்றும் அந்த செல்ல தாத்தாவைப் பிடிக்காது? இவரது மொத்த படங்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும்.
எல்லா படங்களிலும் பிரதான கதாபாத்திரங்களுக்கு அவர்களின் கனவுகளை நினைவூட்டும், சரியான வழியைக் காட்டும் ஒரு செல்ல தாத்தா இருப்பார். அப்படியான ஒரு தாத்தாவை நம் அனைவருக்கும் தெரியும், வி.எஸ்.ராகவன். இவரின் நினைவு தினம் இன்று. கடந்த 2015-ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இறக்கும்போது இவருக்கு வயது 89. முக்கியமான புள்ளிகள் உட்பட அப்போதைய முதல்வராய் இருந்த ஜெயலலிதாவும் இவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அனைவரையும் அன்புடனும் கனிவுடனும் நடத்தக்கூடிய நபர் அவர் என்று அவர் தெரிவித்திருந்தார். இவருடைய திரைப் பயணம் அத்தகையது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தவர் இவர். இவரை சமீப காலத்தில் வள்ளி, என் இனிய தோழி உள்ளிட்ட தொடர்களில் காண நேரிட்டிருக்கலாம்.
இவரது கலைப் பணி மாலதி என்ற இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியதில் தொடங்கியது. திரையில் இவருக்கான அறிமுகம் ‘வைரமாலை’ என்ற நாடகம் மூலமாகக் கிடைத்தது. 1954-இல் அதே பெயரில் இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டபோது திரைத் துறைக்குள் இவர் நுழைத்தார்.
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் அப்பா வேடம் தரித்த பெருமை இவருக்கு உண்டு. இவரது சில முக்கியமான படங்கள் – கர்ணன் (1964), காதலிக்க நேரமில்லை(1964), பொம்மை(1964), இரு கோடுகள்(1969), உரிமைக்குரல்(1974) காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் இவரது பாத்திரம் சிறியது என்றாலும், அவரது முகம் அனைவரின் மனதிலும் பதிந்திருக்கும்.
திரையுலகில் இவருக்கும் இயக்குநர் கே.பாலச்சந்தருக்கும் இடையிலிருந்த நட்பு அனைவருக்கும் தெரிந்தது. 2000-தின் ஆரம்பக் கட்டத்தில் கே.பாலச்சந்தர் இயக்கிய அண்ணி என்ற சீரியலில் இவர் தரித்த பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. 1990-களில் தமிழகத்தின் இயல் இசை நாடக மன்றத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்தினார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய குரலும் உடல் மொழியும் தான் திரையில் அவரின் பாத்திரம் தோன்றும்போது அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக இருந்தது. அதனாலேயே பல குரல் கலைஞர்கள் இவரது குரலை வெளிபடுத்துவதில் ஆர்வம் காட்டினர். இவரின் தனிப்பட்ட ஸ்டைல்லை குரலில் எடுத்து வர முயல்வது பரவலாக நடந்தது.
ஆரம்ப நாட்களில், இந்திய தேசிய கலைஞர்கள் என்ற அமைப்பை நண்பர்களுடன் இவர் தொடங்கினார். இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரும் உறுப்பினராக இருந்தார். பின்னாளில் சினிமாவிற்குள் நுழைய இது அவருக்கு உந்துகோலாக இருந்தது.
இவர் மறைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டது. சளைக்காமல் கிட்டத்தட்ட ஆயிரம் படங்கள் நடித்துத் தந்த இந்த கலைஞர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்கு அரியது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்