Vendhu Thanindhathu Kaadu: ஆஹா! முடிந்தது வெந்து தணிந்தது காடு டப்பிங்... போட்டோ விட்டு அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு!
வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாக நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதன்காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன்னர் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, வெந்து தணிந்தது காடு படக்குழு சார்பாக படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதியினை வெளியிட்டார். தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை படக்குழு போஸ்டர் மூலம் படம் செப்டம்பர் 15 ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாக படத்தின் கதாநாயகர் சிம்பு போட்டோ வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

