Cinema Round-up: சூர்யா இடத்தில் அருண்விஜய்; விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர்..நயனின் புதிய நேர்காணல் - டாப் 5 சினிமா செய்திகள்!
கனெக்ட் படத்தின் ரிலீஸையொட்டி நயன் கொடுத்த பேட்டி ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்துடன், தமிழ் திரையுலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
வாரிசு படத்தின் 3வது பாடல் ரிலீஸானது
வருகிற 24 ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு 3 ஆம் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன் படி வாரிசு படத்தின் 3 ஆவது பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை சின்ன குயில் சித்ரா பாடியுள்ளார்.
பதான் சர்ச்சை
பதான் படத்தின் பஞ்சாயத்து, பல நாட்களாகவே ஓயாமல் நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்து படக்குழுவினர் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து, அண்மையில் நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி பேசினார்.
பதான் பட பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல, அது போல் இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல” என்றார்.
நயனின் நேர்காணல்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை(டிசம்பர் 22) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாகவும், இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர் கொடுத்துள்ள பேட்டி தற்போது வெளியாகி இருக்கிறது.
சூர்யாவிற்கு பதில் அருண் விஜய்
Exclusive#Vanangaan is On... 💥
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 20, 2022
Arun Vijay & Director Bala
Good choice by @arunvijayno1 👍
As actor & performer AV taking his market to next level
Shoot Starts From Feb 2023 pic.twitter.com/kcRQ8eURew
‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், அந்தப்படத்தில் நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, அந்தப்படத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்க இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விபத்தில் சிக்கிய சீரியல் ஹீரோ
View this post on Instagram
முத்தழகு தொடரில் ஹீரோ பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆஷிஷ் சக்கரவர்த்தி; நேற்று இவர் பயணம் செய்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்; இது குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவலில் கடவுளின் அருளால் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டோம் என கூறி காயங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.