மேலும் அறிய

ரஷ்யாவில் "தல": சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அஜித்தின் நியூ ஸ்டில்ஸ்!

நடிகர் அஜித்குமார் ரஷ்யாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, படத்தின் போஸ்டரும், ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. ஒரு சண்டை காட்சி மட்டும ரஷ்யாவில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்குமார் உள்பட படக்குழுவினர் ரஷ்யா சென்றிருந்தனர். அங்கே மீதமிருந்த சண்டை காட்சி படம்பிடிக்கப்பட்டு, வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ரஷ்யாவில் நண்பர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தனது நண்பர் ஒருவருடன் ஹோட்டல் ஒன்றில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. கருப்பு நிற டீ- சர்டில் ஹாலிவுட் நடிகரைப் போன்று அஜித்குமார் அட்டகாசமாக அந்த படத்தில் உள்ளார்.


ரஷ்யாவில்

அஜித்குமார் தீவிர பைக் பிரியர் என்றும், பைக்ரேசர் என்றும் அனைவருக்கும் தெரியும். ரஷ்யாவில் விலையுயர்ந்த பைக்கின் முன்பு பைக் ரேசின்போது அணியும்பாதுகாப்பு ஆடையுடன் அஜித்குமார் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர், அதே ஆடையுடன் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு நடுவில் நின்று அசத்தலான ஒரு போஸ் கொடுத்துள்ளார். பின்னர் தனது நண்பருடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அவரது நண்பரும் பைக் ரேஸ் உடையில் இருக்கிறார்.


ரஷ்யாவில்

நடிகர் அஜித்தை பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் காண்பது என்பது மிகவும் அரிதானது. இதனால், அவர் வெளியில் எப்போது பங்கேற்றாலும், அவரது புகைப்படம் வெளியானாலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி விடுவது வழக்கம்.

வலிமை படத்தின் அப்டேட்டிற்காக கோவில் பூசாரி முதல் பிரதமர் மோடி வரை கேட்ட அவரது ரசிகர்களுக்கு, நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பின்பு வலிமை போஸ்டரும், வலிமை படத்தின் பாடலும் கிடைத்தது. அதன்பின்பு தற்போது வரை வலிமை படத்தில் எந்தவொரு புகைப்படமும், அப்டேட்டும் கிடைக்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் அடுத்த பாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


ரஷ்யாவில்

இந்த நிலையில், ரஷ்யாவில் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், டுவிட்டரில் இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget