அன்புச்செழியன் வசம் சென்றது ‛வலிமை’
‛பே வியூ’ ப்ராஜெக்ட் மற்றும் ஜீ ஸ்டூடியோ இணைந்து தமிழ் நாட்டின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாவிற்கு கொடுத்துள்ளது .

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கும் திரைப்படம் வலிமை. படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த சேஷ்டைகளை உலகறியும். அதற்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

இரண்டாவது அப்டேட் ஆக கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கபட உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு அனுமதிக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது. இன்னும் ஸ்பெயின் நாட்டு அனுமதி கிடைக்காததால் படக்குழு காத்திருப்பதாக அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர் .

We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisraahul and @Gopuram_Cinemas
— Boney Kapoor (@BoneyKapoor) March 29, 2021

இந்நிலையில் ‛பே வியூ’ " ப்ராஜெக்ட் மற்றும் ஜீ ஸ்டூடியோ இணைந்து தமிழ் நாட்டின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாவிற்கு வழங்குவதில் மகிழ்ச்சி" என்று போனிகபூர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .மூன்றாவது அப்டேட் கிடைத்த சந்தோஷத்தில் அவரது ரசிர்கர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .