மேலும் அறிய

Naai Sekar Returns Trailer: “நாய் இல்லாத வீடில்ல; நாய் இல்லாத நாடில்ல” - வெளியானது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ட்ரெய்லர்!

'இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிகுகமாகும் நிலையில், வடிவேலு ரசிகர்களுக்கு கலர்ஃபுல் காமெடி விருந்தாக இப்படம் அமையுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

'இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிகுகமாகும் நிலையில், வடிவேலு ரசிகர்களுக்கு கலர்ஃபுல் காமெடி விருந்தாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார்.

மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

இப்படத்தை முன்னதாக நவம்பர் 11ஆம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போன நிலையில் தற்போது படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் சுராஜ், “மருதமலை படத்தில் வடிவேலு ஏற்று நடித்த என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திரம் 2 மணி நேரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் இந்தப்படம் இருக்கும்.

படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை காமெடிதான். சென்டிமெண்ட்டுக்கு இங்கு இடமே கிடையாது.  அந்த கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான், அவரின் நாய்கள் திருடும் கதாபாத்திரத்தை உருவாக்கினோம்.அவருக்கு இந்தக் கதாபாத்திரம் நிச்சயம் வித்தியாசமானதாக அமையும்.

இதற்காக ஏராளனமான நாய்களை பார்த்தோம். வெளிநாடுகளில் இருந்து கூட நாய்களை, இறக்குமதி செய்தோம். அவைகளுக்காக தனி ஏசி கேரவனையும் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

கொரோனா ஊரடங்கில் நாங்கள் நிறைய பேசினோம். அப்போது அவர் என்னிடம்  தன்னுடைய ரி என்ட்ரி  வேற லெவலில் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் அவருக்கு 7 முதல் 8 தோற்றங்கள் இருக்கின்றன. வடிவேலு இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். ஒரு சீன் செய்வதற்கு முன்னால், கேரவனுக்குள்ளே அந்த சீன் ஒர்க் அவுட் ஆகுதான்னு பலரிடம் கேட்டுபார்ப்பார்.

மக்கள் காமெடிகளை பார்த்து பழைய காமெடிகள் மாதிரி இல்லையேன்னு சொல்லிடக்கூடாதுன்னு என்பதில் மிகவும்  கவனமாக இருந்தார். அவரது சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது, அவர் மட்டுமே அதில் அமர முடியும். எனவே, அவர் இன்னும் அதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.

அப்பத்தா பாட்டுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க  சொல்லி கேட்டோம். அவர் கண்டிப்பா பண்றேன், அண்ணன் படத்துக்கு பண்ணாம வேற யாரு படத்துக்கு பண்ணபோறேன் சொல்லி பண்ணார்.”  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget