மேலும் அறிய

Leo Shooting Spot : வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்... விஜய் - த்ரிஷா டூயட்டுக்கு பிரம்மாண்ட செட்... விரைவில் சென்னை வரும் சஞ்சய் தத்!

த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளை முடித்து ஆசுவாசமடைந்துள்ள நிலையில், மீண்டும் லியோ படப்பிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

லியோ படத்தில் விஜய் - த்ரிஷா டூயட் பாடும் பிரம்மாண்ட பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட உள்ளது.

சென்னையில் லியோ ஷூட்டிங்

நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்துக்குப் பிறகு நடிகர் லோகேஷ் கனகராஜூம், குருவி படத்துக்குப் பிறகு த்ரிஷாவும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ’

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதமே லியோ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சென்னை, பிரசாத் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு பரபரவென ஷூட்டிங் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய் - த்ரிஷா டூயட்

அந்த வகையில் தற்போது விஜய் - த்ரிஷாவின் டூயட் பாடலொன்று பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா தற்போது தான் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளை முடித்து ஆசுவாசமடைந்துள்ள நிலையில், மீண்டும் அவர் லியோ படப்பிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனின் போது பல இடங்களிலும் ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு த்ரிஷாவை பேசவிடாமல் செய்து வந்தனர். த்ரிஷாவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுகுறித்து பேசலாம் எனக்கூறி ரசிகர்களை அமைதிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் முழுவீச்சில் மீண்டும் லியோ ஷூட்டிங்கில் த்ரிஷா தற்போது பங்குபெற்று வருவதாகவும், பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வரும் சஞ்சய் தத்

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், அவரது காட்சிகளும் இந்த மாதத்தில் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் தவிர, நடிகர் அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் , மன்சூர் அலிகான் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் லியோ படத்தை  தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் கொரியோகிராஃபராகவும், தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

முன்னதாக லியோ படத்தில் விஜய்யுடன் சிங்கம் ஒன்று படம் முழுவதும் பயணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தை ஒத்திருக்கும் என்பதால் தான் இந்தப் படத்துக்கு லியோ என தலைப்பிடப்பட்டு, கிராஃபிக்ஸ் மூலம் இந்த சிங்கம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget