மிலாவுக்கும் ஷகிலாவுக்கும் என்ன பிரச்சனை! அம்மா பாசமும், மிலா ஷேரிங்ஸும்..
”அவங்களுக்கு மனசு உருத்தல..மனசுக்குள்ள கேவலமான ஃபீல் இல்லைனா என்னை பார்த்து ஹாய்னு சொல்லலாமே.”
கவர்ச்சி நடிகையாக இருந்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா. அதுவரையில் ஷகிலா மீது பலருக்கு இருந்த பிம்பம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அடியோடு மாறியது. மீதமிருக்கும் சிலர் அவரை பற்றி இப்போதும் அவதூறு பரப்பத் தவறுவதில்லை. பலரும் அம்மா என அன்போடு அழைக்க துவங்கினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது மகள் என திருநங்கை மிலா என்பவரை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார் ஷகிலா. திருநங்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஷகிலாவை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர். பழகுவதற்கு அத்தனை இயல்பாகவும் அன்பாகவும் இருந்த திருநங்கை மிலாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியது. ஷகிலாவும் மிலாவும் ஒன்றாகவே பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தனர்.
இப்படியான சூழலில்தான் மிலா மற்றும் ஷகிலா இருவருக்கும் இடையில் விரிசலை உணர முடிந்தது. இது குறித்து மிலா பங்கேற்ற நேர்காணல்களில் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கியிருக்கிறார் மிலா.
View this post on Instagram
மிலா பகிர்ந்ததாவது :
“ஷகிலா அம்மாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் கிடையாது. அவங்களுடை ஃபேன் பேஜ்தான் இருந்தது. நான்தான் முதன் முதலாக அவங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கினேன். நான் ஷகிலா அம்மாக்கூட ஒரு புகைப்படம் எடுத்து பதிவேற்றியிருந்தேன் அந்த புகைப்படத்தை யாரோ ஒருவர் நீக்கிட்டாங்க. அதை பற்றி ஷகிலா அம்மாவிடம் கேட்டபொழுது அப்படியா கண்ணா நான் பார்க்குறேன்..என்றார். இதிலிருந்து அவர் அந்த பக்கத்தில் ஆக்டிவாக இல்லை என்பது தெளிவாக புரிந்துவிட்டது.
இன்னைக்கு அது ஷகிலா அம்மாவுடைய அக்கவுண்டா அல்லது ஷாசாவுடைய அக்கவுண்டானே தெரியவில்லை. நான் ஷகிலா அம்மா வீட்டிலிருந்து தானாக வெளியேறவில்லை. வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன். எப்போதும் ஒரு குழந்தையை நான் தத்தெடுக்கவே மாட்டேன். ஏனென்றால் என்றாவது ஒருநாள் நிச்சயம் நான் அந்த குழந்தையை காயப்படுத்திவிடுவேன். ஷாசா சீசனுக்கு சீசன் வேற வேற ஆள் கூட இருப்பாங்க. காரியம் ஆகுறவங்க கூடத்தான் இருப்பாங்க. ஆரம்பத்துல வீட்டுக்கு சோத்துக்கு எதுக்குமே வழி இல்லாம இருந்தாங்க. அப்போ என்கூட ஒருவருடம் இருந்தாங்க. அதன் பிறகு அப்சரா ரெட்டி கூட இருந்தாங்க. அதன் பிறகு திருமணம் ஆனதும் மார்கெட் போச்சு. அதன் பிறகு மிலா அவங்க சொந்த அம்மா அப்பா கூட இருக்குறா அப்படிங்குற காரணத்தை வச்சுக்கிட்டு ஷகிலா அம்மாக்கிட்ட நான் உங்களோட பொண்ணு ஃபிரண்டுனு சொல்லி சேர்ந்துக்கிட்டாங்க.
இப்போ நானும் சாஷாவும் பேசுறது கிடையாது.அவங்க பொது இடத்துல பார்த்தா ஒரு ஹாய் கூட சொல்லுறது கிடையாது. அவங்களுக்கு மனசு உறுத்தல..மனசுக்குள்ள கேவலமான ஃபீல் இல்லைனா என்னை பார்த்து ஹாய்னு சொல்லலாமே. நான் சொல்லுறேன்னே நீ ஏன் சொல்லவில்லை. அவங்க என்னையும் ஷகிலா அம்மாவையும் பிரிச்சுடலாம்னு நினைக்குறாங்க . அது ஒருபோதும் நடக்காது. ஆயிரம் திருநங்கைகளை ஷகிலா அம்மா வளர்க்கலாம். நான்தான் அவங்க பொண்ணு “ என தெரிவித்துள்ளார் மிலா.