Trisha: மலையாளத்தில் மூன்றாவது படம்.. டாப் நடிகருக்கு ஜோடி.. உற்சாகத்தில் கேரள த்ரிஷா ரசிகர்கள்!
மலையாளத்தில் டொவினோ தாமஸ் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து வரும் ஐடண்டிடி படப்பிடிப்புத் தளத்தில் இருந்து த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன
த்ரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த 21 ஆண்டுகளாக ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா (Trisha). மெளனம் பேசியதே படத்தில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வரை அழகாலும் நடிப்பாலும் வசீகரித்து வருகிறார். தமிழ் சினிமா கடந்து, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது த்ரிஷா மலையாளத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவரது புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
மூன்றாவது முறையாக மலையாள சினிமா
முந்தையதாக நிவின் பாலியுடன் ஹே ஜூட் மற்றும் மோகன்லாலுடன் ராம் ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா தற்போது மூன்றாவது முறையாக மலையாள படத்தில் நடிக்கிறார். மலையாள நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் ஐடெண்டிடி (அடையாளம் ) என்கிற படத்தில் தற்போது த்ரிஷா நடித்து வருகிறார்.
Delighted to welcome the ever charming #Trisha into the gripping world of#IDENTITY
— Tovino Thomas (@ttovino) December 23, 2023
An #Akhilpaul #Anaskhan Movie!
Finishing up a gritty action set piece together right now.. and eagerly waiting to get into the sets for more intense shoots!
Keep those fingers crossed,… pic.twitter.com/k3BNh2ozPZ
அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்குகிறார்கள். மேலும் த்ரிஷா நடிக்கும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படபிடிப்புத் தளத்தில் இருந்து த்ரிஷா மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இருவரின் புகைப்படங்கள் வீடியோ வெளியாகியுள்ளன.
#IDENTITY#ShootInProgress @trishtrashers pic.twitter.com/RwbX3ZRLLt
— Tovino Thomas (@ttovino) December 23, 2023
திரிஷா சிரஞ்சீவி
அதே மாதிரி தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்து நடிக்க இருக்கிறார் த்ரிஷா. கடந்த 2020ஆம் வருடம் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க இருந்தார் த்ரிஷா. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
விடாமுயற்சி
தமிழில் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் மறுப்பக்கம் தொடர்ந்து வருகிறார். மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்க. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மன்சூர் அலிகான் ஏற்படுத்திய சர்ச்சையில் பல்வேறு நடிகர் த்ரிஷாவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் த்ரிஷா மீது மான நஷ்ட வழக்குத் தொடர இருந்த நிலையில் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தது. மேலும் மன்சூர் அலிகானுக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Nadippu Madam Meme Lawrance: ‘சொல்வதெல்லாம் உண்மை’ லாரன்ஸ் இறந்துவிட்டாரா? உண்மை என்ன?