வெளியானது டிஆர்பி ரேட்டிங்... எந்த சீரியலுக்கு எந்த இடம்...! பட்டியலில் அதிரடி காட்டும் சன் டிவி சீரியல்கள்..!
3 ஆவது இடத்தை அண்ணன் தங்கை பாசத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியல் பிடித்துள்ளது. கடந்த 6 வாரங்களாக டாப் 3 இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.
டிவி சீரியல்களுக்கான வாராந்திர டிஆர்பி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சன் டிவி மூன்று தொடர்கள் முதலிடத்திலும் , அதன் பிறகே விஜய் டிவி சீரியல்களும் இடம்பிடித்துள்ளன.
முதலிடத்தில் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியல் உள்ளது. கயல் சீரியலின் கதைக்களத்தால், கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் நீடிக்கிறது. தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்கும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளும், நிகழ்வுகளுமே கயல் தொடரின் கருவாகும். மேலும் தன்னுடைய தாய், சகோதரிகள், சகோதரர்கள் என அனைவருக்கும் உதவும் கரமாக உள்ளார் கயல். இந்த நிலை தான் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வதால் இச்சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் கயல் நண்பராக எழில் கதாபாத்திரத்தில் வரும் சஞ்சீவ்வின் நட்பு, காதல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கிராமப்பெண்ணை கணவர் ஏமாற்றுவதாக கதைக்களத்தைக் கொண்ட சுந்தரி சீரியல் தான் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த 8 வாரங்களாக டாப் 5 இடத்தில் இருந்து வருகிறது.
3 ஆவது இடத்தை அண்ணன் தங்கை பாசத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியல் பிடித்துள்ளது. கடந்த 6 வாரங்களாக டாப் 3 இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.
4ஆவது இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணாம்மா சீரியல் இருக்கிறது. 5ஆவது இடத்தில் சன் டிவியின் ரோஜா சீரியலும், 6ஆவது இடத்தில் பாக்கியலட்சுமியும், 7ஆவது இடத்தில் கண்ணானே கண்ணே சீரியல்களும் இடம்பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் 8ஆவது இடத்தையும், ராஜா ராணி 9ஆவது இடத்தையும் 10ஆவது இடத்தை அபியும் நானும் சிரீயலும் இடம்பிடித்துள்ளது. இதில், குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜீ டிவி சீரியல்கள் ஒன்று கூட முதல் 20 இடங்களுக்கான டிஆர்பி பட்டியலில் இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது சின்னத்திரை கலைஞர்களிடையே.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்