(Source: ECI/ABP News/ABP Majha)
Captain health: ‛வானத்தை போல மனம் படைத்த மன்னவனே...’ விஜயகாந்தை சந்தித்து நெகிழ்ந்த இயக்குனர்கள்!
நடிகர், தலைவர் மட்டுமின்றி தலைசிறந்த மனிதர், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். திரைவாழ்வில் அவரின் வெற்றிக்கு காரணமாக பலரும் இருந்துள்ளார்கள். பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளார் விஜயகாந்த்.
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்க பட்டு இருந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் தான் நடைபெற்றது. அந்த தேர்தலில் மீண்டும் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்கதின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் இயக்குனர் ஆர். கே. செல்வமணி.
விஜயகாந்த் உடல் நலம் :
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவருமான தே.மு.தி.கவின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த வகையில் நீண்ட காலமாக நீரிழிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் வலது கால் கட்டை விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் மருத்துவ ஆலோசனையின் படி அவற்றை அகற்றியுள்ளனர். தற்போது வீடு திரும்பியுள்ள கேப்டன் நலமோடு இருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.
நேரில் சந்திக்கும் பிரபலங்கள்:
நடிகர் விஜயகாந்தின் உடல் நலன் மீது அக்கறை கொண்ட திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது சென்று அவரின் நலன் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கேப்டனை அவரது இல்லத்தில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு , எஸ். ரவிமரியா, விக்ரமன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் கேப்டன் விஜயகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
TN Film Director’s Association team met Vijaykanth. pic.twitter.com/O2oMLpJy4v
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 19, 2022
அரசியல் பிரமுகர்களும் விசாரிப்பு :
திரையுலகை சேர்த்தவர்கள் மட்டுமின்றி தே.மு.தி.கவின் தலைவர் விஜயகாந்தை பல அரசியல் பிரமுகர்களும் சமூக வலைத்தளம் மூலமாக விசாரித்து வருகிறார்கள். இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பொன்னேர் செல்வம், வைகோ உள்ளிட்டோர் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலைஉணவு திட்டத்தை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும்,முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/LyhIeIoGf5
— Vijayakant (@iVijayakant) September 15, 2022
ஏணிப்படியாய் இருந்த கேப்டன்:
நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் சீராகி நலம் பெறவேண்டும் என்பது தான் திரை ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரது விருப்பம். அவர் ஒரு நடிகர், தலைவர் மட்டுமின்றி தலைசிறந்த மனிதர். சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். திரைவாழ்வில் அவரின் வெற்றிக்கு காரணமாக பலரும் இருந்துள்ளார்கள். அதே போல பலரின் வெற்றிக்கும் நடிகர் விஜயகாந்த் உறுதுணையாய் இருந்துள்ளார் என்பது தான் உண்மை.