சாதனாவிற்கு வந்தது ‛தீபாவளி பரிசு’... அனுப்பியது யார் என தெரியாமல் தவிப்பு!
வீடாது கருப்பு போல... மீண்டும் அவரை எப்படியாவது தொடர்பு கொள்வேன் என்றும்.... சம்மந்தப்பட்ட புடவையை உடுத்தி காட்டுவேன் என்றும் மகிழ்ச்சி பொங்க ‛தீபாவளி பரிசுடன்’ விடைபெற்றார் சாதனா.
முன்னாள் டிக்டாக் பிரபலங்கள் என்கிற பெயரில் சிலர் அடிக்கும் கூத்துக்கள் தாங்க முடியாத, தவிர்க்க முடியாத இன்பத்தொல்லையாகிவிட்டது. யூடியூப்பில் ஒரு சேனல் ஆரம்பித்துக் கொண்டு, அதற்கு அவர்களின் பெயரில் அபீசியல் என்று பெயரிட்டுக் கொண்டு, வீடியோ போடுவது, பார்வையாளர்கள், ரசிகர்கள் என அவர்களிடம் பரிசுகளை பெறுவது பணத்தை பெறுவது என அவர்களது வாழ்க்கையே தனி வாழ்க்கையாக போய் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது திருச்சி சாதனாவும் தனது முகவரிக்கு பரிசுகளை வரவழைத்து அதன் மூலம் புதுவித விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த பரிசுப்பொருட்களை பார்வையாளர்கள் அனுப்பி, அவர்களை உற்சாகப்படுத்தி தானும் உற்சாகமாகிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் திருச்சி சாதனாவிற்கு வந்த சமீபத்திய பரிசு, அதுவும் தீபாவளி பரிசு தற்போது பிரபலமாகி வருகிறது. வழக்கம் போல தனக்கு வந்த பார்சல் ஒன்றை திறந்தவெளியில் வைத்து பிரிக்கிறார் சாதனா. பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்கள், கடைசி வரை அந்த பாம்பை காட்ட மாட்டார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி தான் சாதனாவும் பார்சலை திறப்பதற்கு முன் நீ....ண்ட உரையாற்றி, இதோ அதோ என ஒருவழியாக பார்சலை பிரித்தார். உள்ளே பார்த்தால், நீல நிறத்தில் ஒரு புடவை. அவ்வளவு தான்... ‛ஆஹா... ஓஹோ...’ என புடவை புகழ் பாட ஆரம்பித்துவிட்டார் சாதனா. அனுப்பியது யார் என்று தெரியாது... எங்கிருந்து வந்தது என்று தெரியாது... ஆனால் ஒரே ஒரு மொபைல் போன் எண் மட்டும் இருந்தது.
தனக்கு தீபாவளி பரிசாக அந்த புடவை வந்ததாக அவரே கூறிக்கொண்டு, சம்மந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொள்ளப்போவதாக, முன்பு கூறியது போலவே வழக்கமான பில்டப்புகளை கொடுத்துவிட்டு சம்மந்தப்பட்ட எண்ணுக்கு போன் செய்தால் அதவும் சுவிட்ஜ் ஆப். சரி ட்ரூ காலரில் போட்டு பார்த்தால் லீலா சுபாராய் என்று பெயர் இருந்தது. மொபைல் போனில் வந்த சப்தத்தை வைத்து அது வெளிமாநில தொலைபேசி எண் என தெரிகிறது. தனக்கு வெளிமாநில ரசிகர் ஒருவர் தீபாவளி பரிசு அனுப்பிவிட்டார் என கொண்டாடி தீர்த்துவிட்டார் சாதனா. வீடாது கருப்பு போல... மீண்டும் அவரை எப்படியாவது தொடர்பு கொள்வேன் என்றும்.... சம்மந்தப்பட்ட புடவையை உடுத்தி காட்டுவேன் என்றும் மகிழ்ச்சி பொங்க ‛தீபாவளி பரிசுடன்’ விடைபெற்றார் சாதனா.
இதோ சாதனாவின் அந்த சாதனை வீடியோ...
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு...
இமான் அண்ணாச்சியை போனில் கலாய்த்த ஜி.பி.முத்து... பிக்பாஸ் எண்ட்ரிக்கு முன் நடந்த சுவாரஸ்யம்!#ImmanAnnachi #gpmuthu #BiggBossTamil5 #Viral #PhoneCallhttps://t.co/VRM0Moh3hu
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
டெல்லியில் பாலத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்... சாலையில் சென்றோர் அதிர்ச்சி... நடந்தது இது தான்!#Airindiaflight #Delhiairporthttps://t.co/k81venCGQg
— ABP Nadu (@abpnadu) October 4, 2021