‛அந்நியன் தோன்றுகிறார்...’ பாணியில் இன்று மாலை தோன்றுகிறார் சிக்கா... அறிவித்தபடி மீசை ரிமூவ்!
‛நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்கிற தலைப்பில் சிக்கா வெளியிட்டுள்ள வீடியோவில், ‛சூர்யா தேவியை போலீஸ் தூக்கும் என்றும்... தப்ப முடியாது,’ என்றும் பேசியுள்ளார்.
முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் சர்சை பிரபலம் என பல பெருமைகளை கொண்ட சிக்கந்தர் என்கிற சிக்காவுக்கும், அதே குடையின் கீழ்வரும் சூர்யா தேவிக்கும் எழுந்த பிரச்னை காரணமாக, சிக்காவை வீடு தேடிச் சென்ற சூர்யா தேவி, செருப்பால் அடித்தார். இரு வாரங்கள் ஆகியும் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்கிற குற்றச்சாட்டுடன் தினமும் ஒரு வீடியோ போட்டு புலம்பி வருகிறார் சிக்கா. ‛கெத்தா பண்ணேன் பார்த்தியா...’ என, தன் பங்கிற்கு தினமும் வீடியோ போட்டு இன்னும் சிக்காவை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா தேவி. இந்நிலையில் கடந்த திங்களன்று வீடியோ பதிவிட்ட சிக்கா, தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் சனிக்கிழமை வரை காத்திருப்பேன் என்றும், ஞாயிறு அன்று நேரலையில் அனைவர் முன்னிலையில் மீசையை எடுப்பேன் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
சிக்காவின் இந்த அறிவிப்பு, வழக்கம் போல அவரை கிண்டலடிக்கவும், மீம்ஸ் போடவும் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிக்கா சளைக்காமல், ‛ஒரு ஆணுக்கு நீதி வேண்டும்... நியாயம் வேண்டும்...’ என்று தினசரி நேரலையில் நியாயம் கேட்டுக் கொண்டே இருந்தார். இதற்கிடையில் நேற்று நேரலையில் வந்து தன் பாளோவர்ஸ்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். சிக்கா, அப்போது ஒருவர் ,‛ மீசையை எடுக்க வேண்டாம்,’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த சிக்கா, ‛நீங்க வேண்டாம்னு சொல்வீங்க...ஆனால் இவனுங்க பூரா எனை கழுவி ஊத்துவானுங்க. என்ன சிக்கா நாடகம் போட்டியானு சொல்வானுங்க.... இவனுங்களை என்னால் சமாளிக்கவே முடியாது. அந்த தைரியம் எனக்கு இல்லை. சொன்னபடி நான் நாளை மாலை 6 மணிக்கு நேரலையில் என் தாய் முன்னிலையில் மீசையை எடுப்பேன்,’’ என்று பதிலளித்தார்.
அந்நியன் தோன்றுகிறார் என்று அந்நியன் படத்தில் ஒரு பெரிய பிரளயத்தை ஏற்படுத்துவார்கள். அந்த அளவிற்கு பில்டப் கொடுத்து , தன் மீசை இழக்கும் படலத்தை அறிவித்திக்கிறார் சிக்கா. இதற்கிடையில் மதுரையில் இருந்து சிக்கா மேலூருக்கு குடிபெயர்ந்ததாகவும், தனக்கு பயந்து தான் சிக்கா இந்த அறிவிப்பை எடுத்ததாகவும் மற்றொருபுறம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா தேவி. ‛நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்கிற தலைப்பில் சிக்கா வெளியிட்டுள்ள வீடியோவில், ‛சூர்யா தேவியை போலீஸ் தூக்கும் என்றும்... தப்ப முடியாது,’ என்றும் பேசியுள்ளார்.
எது எப்படியோ... சண்டே என்டர்டெயின்மெண்ட் இன்று உறுதி என்று ஒரு தரப்பு, மாலை 6 மணியை எதிர்பார்த்து பரபரத்து காத்திருக்கிறது. அந்நியன் வருவாரா... ஆசி தருவாரா என்றெல்லாம் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறது. நாமும் காத்திருக்கலாம் அந்த 6 மணிக்கு.
மேலும் இது தொடர்பான செய்தி...
‛சூர்யா தேவியை கைது செய்ய சிக்கா கெடு’ தவறினால் நேரலையில் மீசையை எடுப்பதாக மிரட்டல்!#TikTok #SuryaDevi #Sikka #Arrest https://t.co/BFp4g2kiv3
— ABP Nadu (@abpnadu) August 18, 2021
இதற்கிடையில் சூர்யா தேவிக்கும்-தனது முன்னாள் பிரியமானவர் சிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் பின்னணிக்கு தான் தான் காரணம் என்பதை உணர்ந்து ரவுடி பேபி சூர்யா, மீண்டும் சிக்காவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் சூர்யா தேவிக்கு பதிலடி தர வேண்டும் என்றும் சிக்கா ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.