மேலும் அறிய

Thunivu Third Single: இது கேங்ஸ்டா.. துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள்.. யாரு பாடியிருக்கா தெரியுமா?

பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள “சில்லா சில்லா”பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பெற்றது.

அதன் பின்னர், “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, அத்துடன் சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என்பது தெரிகிறது.

சபீர் முதன்முதலில், பாடகராகவும் பாடலாசியராகவும் சினிமா உலகத்தில் கால்தடம் பதித்தார். வத்திக்குட்சி படத்தில் இரண்டு பாடல்களை பாடிய இவர், சில தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். நீயா 2, தில்லுக்கு துட்டு 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

துணிவு ஆல்பம் எப்படி இருக்கு?

இதுவரை வந்த சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரு பாடல்களும் நிறைய பார்வைகளை பெற்றாலும், பட்டிதொட்டியெங்கும் பரவவில்லை. சிலர் இந்த பாடல் நன்றாகதான் இருக்கிறது என்றும் சிலர் இப்போது கேட்க நன்றாக இல்லை, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் தாய் கிழவி பாடல் போல் கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். 

வாரிசு Vs துணிவு 

வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கும் துணிவு படத்திலிருந்து, இதுவரை “சில்லா சில்லா” மற்றும் “காசேதான் கடவுளடா” பாடல்கள் வெளியாகி உள்ளன. இப்பாடல்கள் அஜித் ரசிகர்களிடமிருந்து கலைவையான  விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், போகப் போக செம ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வாரிசிலிருந்து ஒரு அப்டேட் வந்தால், அடுத்த நாளே துணிவிலிருந்து அப்டேட் வருகிறது என்றும்  சில விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்து வருகின்றனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்:

வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget