Thiruvin Kural: ஓயாத அஜித் பட விவகாரம்.. அருள்நிதியை ஹீரோவாக்கிய லைகா நிறுவனம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!
லைகா நிறுவனம் தயாரிக்கும் 24வது படத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் 24வது படத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் படத்தயாரிப்பிலும், விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் லைகா நிறுவனம் டான், பன்னிக்குட்டி, பொன்னியின் செல்வன் 1, பட்டத்து அரசன், நாய் சேகர் ரிட்டன்ஸ், ராங்கி என பல படங்களை தயாரித்தது. மேலும் ஆர்.ஆர்.ஆர்., சீதா ராமம் ஆகிய படங்களை விநியோகம் செய்தது.
இதனைத் தொடர்ந்து லைகா நடிகர் அஜித் நடிக்கும் 62வது படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. முதலில் இப்படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பின்னர் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வுகளால் அவர் கழட்டி விடப்பட்டார். இதனால் அஜித்தை வைத்து அடுத்தப்படம் இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
View this post on Instagram
இந்நிலையில் லைகா நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடிக்கிறார். பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில், ஹரிஸ் பிரபு இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு “திருவின் குரல்” என பெயரிடப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆத்மிகா அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி தொடர்ந்து வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.