Thiruchitrambalam Box Office: தனுஷ் கேரியரில் ஒரு மைல்கல்.. பழம் படைத்த புதிய சாதனை.. திருச்சிற்றம்பலம் வசூல் இதுதான்!
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல்(Thiruchitrambalam Box Office) குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல்(Thiruchitrambalam Box Office) குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர்,ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.
View this post on Instagram
ஃபீல் குட் படமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் குறித்தான விமர்சனங்களும் பாசிட்டிவாக வெளியானதால் அடுத்தடுத்த நாட்களில் தியேட்டருக்கு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக செல்ல ஆரம்பித்தனர். இதனால் படத்தின் வசூலும் அதிகமாக தொடங்கியது.
அதன் படி படம் வெளியான 8 நாட்களில் இந்திய அளவில் 47.25 கோடி வசூல் செய்தது. தொடந்து இராண்டாவது வார வெள்ளிக்கிழமை 2 கோடியும், இராண்டாவது சனிக்கிழமை 4.50 கோடியும், இராண்டாவது ஞாயிற்றுக்கிழமை 5 கோடியும், இராண்டாவது திங்கள் கிழமை 1.50 கோடியும் வசூல் செய்துள்ளது. ஆக மொத்தத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இந்திய அளவில் 60.25 கோடி வசூல் செய்துள்ளது.
View this post on Instagram
தமிழ்நாடு அளவில் பார்க்கும் போது இந்தப்படம் இதுவரை 52 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வசூல் மூலம் தனுஷ் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக திருச்சிற்றம்பலம் படம் மாறியிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் 51 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்கள் வாரியாக வசூல்
தமிழ்நாடு -52 கோடி
ஆந்திர பிரதேசம் - 2.50 கோடி
கர்நாடகா - 4 கோடி
கேரளா - 1 கோடி
இதர இந்தியப்பகுதிகள் - 0.75 கோடி
மொத்தம் -60.25 கோடி