Actress Rekha | என் மகள் மேல பொறாமைப்படுறாங்க.. என்னால அவளைப் பாக்கமுடியல - வருந்தும் ரேகா
என் மகள் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமைப்படுவதில்லை- ரேகா
பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. 80களில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்த ரேகாவுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான புன்னகை மன்னன் படத்தின் மூலம் ரேகா மிகவும் பிரபலமடைந்தார்.
அதனையடுத்து அவர் 80-களின் கனவு கன்னி என்றும் அந்தக் காலத்து இளைஞர்களால் போற்றப்பட்டவர். ரேகா தற்போது சில படங்களில் நடித்துவருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ரேகாவுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். அவர் படித்துவிட்டு அமெரிக்காவில் வேலை செய்துவருகிறார். ரேகாவும், அவரது கணவரும் இந்தியாவில் இருக்கின்றனர்.
இந்தச் சூழலில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை சமீபத்தில் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பலர் வெளிநாடுகளிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது. அதேசமயம் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வர விருப்பப்பட்டிருக்கிறார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவரால் வர முடியாத நிலை உருவானது.
Shilpa Shetty | 2007-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஆபாச நடத்தை வழக்கு.. விடுவிக்கப்பட்டார் ஷில்பா ஷெட்டி..
இந்நிலையில் நடிகை ரேகா தனது மகளை இதுவரை காண முடியாதது குறித்து கூறுகையில், “என் மகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு, இப்போது வேலையில் சேர்ந்து இருக்கிறாள். மகளை அங்கே தனியே விட்டுவிட்டு, சுமார் ஒன்றரை ஆண்டாக ‘விசா’ கிடைக்காமல், நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கிறோம்.
என் மகள் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமைப்படுவதில்லை. எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இந்த தலைமுறை நடிகைகளுடன் போட்டி போட முடிகிறது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Akhanda Screening: பாலைய்யாவுக்காக ஒன்று கூடிய கிராமம்! தியேட்டராக மாறிய மைதானம்! ஃபையர் விட்ட கிராம மக்கள்!
Pandian Stores Mullai: குட்டி பவானியுடன் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. முழு விபரம் உள்ளே..!
Watch Video: வெள்ளத்தில் சிக்கிய நாய்… துணிச்சலாக இறங்கிய ஊர்காவல்படை போலீஸ்… விடியோ வைரல்!