Thendral Vanthu Ennai Thodum: சினிமா தோத்துரும்...மிரட்டிய சண்டை காட்சி...எந்த சீரியல் தெரியுமா?
சில சமயங்களில் வெள்ளித்திரையில் வரும் படங்களில் இடம் பெறும் காட்சிகள், பாடல்கள் என அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து சீரியல்களில் கதை நகர்வது வழக்கம்
சினிமாவை மிஞ்சும் வகையில் சின்னத்திரை சீரியல் ஒன்றில் இடம்பெற்ற சண்டைக் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியல்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பார்வையாளர்களின் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றது.
View this post on Instagram
சில சமயங்களில் வெள்ளித்திரையில் வரும் படங்களில் இடம் பெறும் காட்சிகள், பாடல்கள் என அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து சீரியல்களில் கதை நகர்வது வழக்கம். இதனை சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்ச்சிப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தற்போது கடும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவில் படித்துவிட்டு ஊர் வரும் பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் பெண் அபியை அவரது சம்மதம் இல்லாமல் ஒரு ரவுடியான வெற்றி தாலி கட்டி விடுகிறார். தாலி சென்டிமென்ட் காரணமாக அபி மதிப்பதால் அதை கழற்றாமலே தனக்கு தாலி கட்டிய அந்த நபர் தான் தன் கணவர் என்று கூறி அவருடன் சேர்த்து வாழ்கிறார்.இதன் பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே இந்த சீரியலின் அடிப்படை கதையாகும். இதன் அறிமுக ப்ரோமோவே இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
View this post on Instagram
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான சீரியலில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. இப்படி சண்டை நடக்கும் நிலையில் வெற்றியின் மாமனார் எவ்வித உணர்வும் இல்லாமல் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பார். இதனை ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர்.