மேலும் அறிய

Theatre Review Ban : மைக்கோடு வந்தா அம்புட்டு தான்.. புதுப்பட ரிலீஸ் .. தயாரிப்பாளர் சங்கம் வார்னிங்

Theatre Review Ban : திரையரங்க வாயிலில் யூ டியுபர்கள் விமர்சனத்தில் ஈடுபட கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

சமீபகாலமாக தமிழில் வெளிவரும் திரைப்படங்களில், படங்களை விமர்சனம் செய்யாமல் சில யூ டியுபர்கர் மற்றும்  விமர்சகர்கள் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது தனி நபர் தாக்குதலில் ஈடுப்படுவது சரி இல்லை, என்றும் இனிமேல் திரையரங்க வாயிலில் யூ டியுபர்கள் விமர்சனத்தில் ஈடுபட கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளரிடம் கோரித்தை வைத்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளார் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தனி நபர் தாக்குதல்:

”திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.”

இதையும் படிங்க:  AR Rahman Divorce : ”அர்த்தத்தை தேடுகிறோம்” அப்பா-அம்மா திடீர் விவாகரத்து, ஏ.ஆர் அமீன் சொல்வதென்ன?

”திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.”

தரக்குறைவான விமர்சனங்கள்:

”ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கருதுகிறோம்.”

”விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”

”இந்த சினிமா துறையால் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர்கள் இனிமேலாவது தங்களை திருத்தி கொண்டு. சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.”

கங்குவாவுக்கு வந்த விமர்சனம் :

”அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்க தக்கது. சமீபத்தில், 'கங்குவா" திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர். ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channel-களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில், வெளியே வந்து அந்த ஓட்டல் பற்றி ஊடங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாரவது பேசி இருக்கிறார்களா? அவ்வாறு பேசி இருந்தால், அந்த ஓட்டல் தான் சும்மா விட்டிருப்பார்களா? ஓட்டல் மட்டுமில்லை. எந்த பொருளை வாங்கும் அல்லது உபயோகிக்கும் இடத்தில், அது பிடிக்காத பட்சத்தில், அதை நாகரிகமாக எடுத்து சொல்லி அதற்கான தீர்வை காண்பார்களே தவிர, ஊடங்களில் அது பற்றி மோசமாக பேசி, அந்த ஒட்டலையோ, விற்பனை அங்காடியையோ, Service Centre-யோ எவரும் வசைபாடி, பேசி நாம் பார்த்ததில்லை.

திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தை கேட்டு YouTube Channel-களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் (Audience) இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள்.

அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல YouTube Channel-கள் அவைகளை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யமால் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன.

சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.”

யூ டியூப்பர்களுக்கு தடை:

”இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel- ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்” என அந்த கண்டன அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
School Leave:  பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
School Leave: பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
Embed widget