வீட்டிலேயே தோட்டம் அமைக்க திட்டம் இருக்கா?இதை கவனிங்க!

Published by: ஜான்சி ராணி

தண்ணீர் ஊற்றி, உரமிட்டு, அவ்வப்போது கத்தரிக்க வேண்டும். அதன் பலனை நீங்கள் நீண்ட காலத்தின் முடிவில் அனுபவிக்கலாம். 

இருப்பினும் இதில் உள்ள சிக்கல்கல், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுவது உள்ளிட்டவை குறித்து காணலாம்.

டெட்டனஸ்

டெட்டனஸ் பாக்டீரியா (க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி) மண் மற்றும் அழுக்குகளில் காணப்படுகிறது. இது நடவு செய்யும் போது தோல் காயங்கள் மூலம் உடலில் நுழையும்.

இதைத் தவிர்க்க, தோட்டம் அமைக்கும் போது எப்போதும் கையுறைகளை அணிய வேண்டும்.

டெட்டனஸ் தடுப்பூசியை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்.

தோட்டக் கருவிகள்

மற்றும் கூர்மையான கருவிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

லெப்டோஸ்பிரோசிஸ்
இது கழிவுநீரில் காணப்படுகிறது. குறிப்பாக செல்லப்பிராணி அல்லது எலியின் சிறுநீரில் மாசுபட்ட நீரில் வாழும். தண்ணீர் தேங்க விட வேண்டாம்.


பூஞ்சை தொற்று (ரிங்வோர்ம்)

ரிங்வோர்ம் பூஞ்சை பாதிக்கப்பட்ட மண் அல்லது தாவரங்களில் இருக்கும். இதைத் தவிர்க்க எப்போதும் நல்ல தரமான கையுறைகளை அணியுங்கள்.

ஒவ்வாமை

மரங்களை நடும் போது மகரந்தம், மற்றும் தூசி ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தோட்டப் பணிகளின்போது மாஸ்க் அணிவது மூலம் இதை தடுக்கலாம்.

ஜியார்டியாசிஸ்

இது ஒட்டுண்ணி வகையை சேர்ந்தது. தண்ணீரில் வளரும். அழுக்கு கைகள் அல்லது தண்ணீர் மூலம் உடலில் நுழையும். இதைத் தவிர்க்க, தோட்டம் அமைத்த பிறகு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுங்கள்.

தோட்டம் அமைப்பது நல்லதாக இருந்தாலும், அதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சுத்தமாக பராமரிப்பது, உங்களுக்கு ஏற்ற செடிகளை தோட்டத்தில் வைப்பது நல்லது.