மேலும் அறிய

AR Rahman Divorce : ”அர்த்தத்தை தேடுகிறோம்” அப்பா-அம்மா திடீர் விவாகரத்து, ஏ.ஆர் அமீனின் உருக்கமான பதிவு!

AR Rahman Divorce : அப்பா மற்றும் அம்மாவின் விவகாரத்து குறித்து ஏ.ஆர் அமீன் “இந்த கடினமான தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் ஏ.ஆர் ரஹ்மானும் மகன் அமீனும் தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

முடிவுக்கு வந்த 29 ஆண்டு திருமண வாழ்க்கை: 

ஆஸ்கார் விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தங்கள் 30 ஆண்டு திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவி சாய்ராவுக்க இரண்டு மகள்கள் மற்றும் அமீன் என்கிற மகனும் உள்ளனர். 

சாய்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.. இதுகுறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட  மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்போடு இருவரும்  முடிவு செய்துள்ளனர். வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா தெரிவித்துள்ளனர். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் எங்களது தனியுரிமை மற்றும் புரிதலை அவர் உங்களிடம் கேட்டுக்கொள்கிறார்.  ஏனெனில் அவர் தனது வாழ்க்கையின்   கடினமான நேரத்தில் உள்ளார்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

விவகாரத்து குறித்து ரஹ்மான்: 

தங்கள் விவகாரத்து குறித்து சமூக வலைதளத்தில்  ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது, எங்கள் திருமண வாழ்வில் நாங்கள் முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். எங்கள் நண்பர்கள், இந்த பலவீனமான நேரத்தை நாங்கள் கடந்து செல்லும்போது ஆதரவாக இருக்கும் நண்பர்களுக்கும்  எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி என்று ரஹ்மான் அறிவித்துள்ளார். 

ஏ.ஆர் அமீன் பதிவு :

தனதுஅப்பா மற்றும் அம்மாவின் விவகாரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரஹ்மானின் மகன் ஏ.ஆர் அமீன் “இந்த கடினமான தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


AR Rahman Divorce : ”அர்த்தத்தை தேடுகிறோம்” அப்பா-அம்மா திடீர் விவாகரத்து, ஏ.ஆர் அமீனின் உருக்கமான பதிவு!

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Embed widget