மேலும் அறிய

Cinema Headlines: கங்குவா அப்டேட் தந்த படக்குழு; அஜித் கதையே கேட்க மாட்டார்- கரு.பழனியப்பன் - சினிமா தலைப்புச் செய்திகள்!

Cinema Headlines: சினிமா தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்.

Kanguva Suriya: கங்குவாவின் குரலும் ஆட்சி செய்யும்: கூல் கெட்-அப்பில் சூர்யா! அப்டேட் தந்த படக்குழு

கோடை விடுமுறையைக் குறிவைத்து மெகா பட்ஜெட் பான் இந்திய படமாக இந்த ஆண்டு ஏப்ரலுக்கு கங்குவா வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது.மேலும் படிக்க

Ajithkumar: அஜித் கதையே கேட்க மாட்டார்.. அடுக்கடுக்காக புட்டு புட்டு வைத்த இயக்குநர் கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு.பழனியப்பன் அஜித் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதில், “திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் அஜித்தை ரசிப்பவன் நான். கதையை விட ஹீரோ பிம்பம் தான் முக்கியம் என முன்னிறுத்தியவர் நீங்கள். 1997 ஆம் ஆண்டு என்னுடைய கதை ஒன்றை இயக்குநர் தரணி இயக்குவதாக இருந்தது. ரெட்டை ஜடை வயசு ஷூட்டிங்கில் இருந்த உங்களிடம் கதை சொல்ல இருவரும் வந்தோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்களை காணவில்லை. எங்கே என தேடிய போது அங்கு கடைநிலை ஊழியர் போல திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தீர்கள். 

நீங்கள் எங்களிடம் கதையெல்லாம் வேண்டாம். என்னோட சம்பளம் ரூ.25 லட்சம். அதில் ரூ.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தால் அடுத்த மாதமே ஷூட்டிங்கிற்கு வந்துடுவேன் என சொன்னீர்கள். ஒரு வரி கதையாவது கேளுங்கள் என தரணி சொல்லியும், இந்த படம் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும். அதனால் கதை சிறப்பாக பண்ணியிருப்பீர்கள். இதேபோல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் நீங்கள் பெரிதாக கதையை பற்றி இயக்குநரோடு பேசியதாக நினைவில்லை. எப்போது கதையை இயக்குநரோடு முடிவுக்கு விட்டு விடுபவர் என கேள்விப்பட்டுள்ளேன்” என கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

Jason Sanjay: விஜய் மகனுடன் கைகோர்க்கும் துல்கர்? தமிழ் சினிமா தாண்டி பான் இந்தியா குறி: வேற லெவல் தகவல்!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பினும் இந்தி, தெலுங்கு, தமிழ் என மொழி தாண்டி துல்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் துல்கர் சல்மான் தற்போது சூர்யா நடிக்கும் புறநானூறு, மணிரத்னம் - கமல் காம்போவில் உருவாகும் தக் லைஃப் மற்றும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் சினிமா லைன் அப் மிகவும் நீளமாக இருக்கிறது. அதில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துல்கர் புதிதாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. மேலும் படிக்க

Director Perarasu: த்ரிஷா விவகாரம்.. அரசியல்வாதிகள் பேச்சில்  விஷம் இருப்பதாக பேரரசு கண்டனம்

செய்தியாளர்களை சந்தித்த ஏ,வி.ராஜூ, 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பல பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். அப்போது நடிகை திரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள், நடிகர் கருணாஸ் உள்ளிட்டவர்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.சமூக வலைத்தளங்களிலும் ஏ.வி.ராஜூ செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.மேலும் படிக்க

Baby Vichithra: அப்பவே கல்யாணம் பண்ண கேட்டேன்.. அஜித்தை நினைத்து வருத்தப்பட்ட பிரபல நடிகை..

பேபி விசித்ரா லேட்டஸ்ட் நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். அதில், “எனக்கு இன்னும் அந்த சீன் நியாபகம் இருக்கும். அந்த காட்சியில் 3 பேர் உட்கார்ந்து இருந்தோம். சரியான வெயிலில் தான் அந்த காட்சியை எடுத்தார்கள். துணியை கட்டிட்டு நாங்க உட்கார்ந்து இருக்க, ஷாட் எடுக்கும்போது தண்ணியை தலையில் ஊற்றுவார்கள். அது அடிக்கிற வெயிலுக்கு காய்ந்து விடும். அப்புறம் அஜித்திடம் கொஞ்சுட்டு அழகா இருக்க கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அப்ப கேட்டேன். ஆனால் மிஸ் பண்ணிட்டேன்” என கூறியுள்ளார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget