Thangalaan Release Date: டிசம்பர் 1-ல் டீசர்; ஜனவரி 26ல் ரிலீஸாகும் 'தங்கலான்' படம் - பட்டையை கிளப்புமா விக்ரம்- பா.ரஞ்சித் காம்போ?
விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
![Thangalaan Release Date: டிசம்பர் 1-ல் டீசர்; ஜனவரி 26ல் ரிலீஸாகும் 'தங்கலான்' படம் - பட்டையை கிளப்புமா விக்ரம்- பா.ரஞ்சித் காம்போ? Thangalaan Release Date Official Announcement January 26th 2024 in Cinemas Worldwide Pa Ranjith Vikram Thangalaan Release Date: டிசம்பர் 1-ல் டீசர்; ஜனவரி 26ல் ரிலீஸாகும் 'தங்கலான்' படம் - பட்டையை கிளப்புமா விக்ரம்- பா.ரஞ்சித் காம்போ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/27/c1acea5e3d15a890592c23a918ce982c1698407506333572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Thangalaan Release Date: விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தங்கலான்:
நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து சிறப்பான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வம் 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். இதனிடையே நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தான் தங்கலான்.
இப்படத்தில், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜூன் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த தங்கலான்:
ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் கிஷோர் குமார். கோலார் தங்க வயல் சுரங்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த அசத்தலான கிளாசிக் பீரியாடிக் திரைப்படம். தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே இதுவரையில் காணாத ஒரு வரலாற்று படமாக "தங்கலான்" அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக தங்கலான் உருவாகி உள்ளது. அந்த காலகட்டத்தையொட்டிய கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர வைத்துள்ளது. இந்த படம் தொடர்பாக அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு:
#Thangalaan from 26-1-24 in cinemas worldwide 💥💥💥💥❤️ @Thangalaan @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___ @ActorMuthukumar @preethy_karan @arjun_anbudan @gvprakash @Lovekeegam @kishorkumardop @EditorSelva… pic.twitter.com/Nh0iAKgDyJ
— pa.ranjith (@beemji) October 27, 2023
இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி தங்கலான் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
5 மாநில சட்டமன்ற தேர்தல்; விழிப்புணர்வு தூதராக பிரபல பாலிவுட் நடிகர் நியமனம்
Tharunam Movie: ”விரைவில் திரையில்”.. டப்பிங் பணி புகைப்படங்களை பகிர்ந்த “தருணம்” படக்குழு..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)