Thalapathy Vijay: விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை எத்தனை கோடி தெரியுமா?
நடிகரும் தவெக தலைவருமான தளபதி விஜய் வெளியூர் பயணங்களுக்கு பயன்படுத்தி வரும் தனி விமானத்தின் விலை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியும் போட்டியிடும் என்றும் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும் விஜய் கூறியிருந்தார். இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது ஜன நாயகன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய், அவ்வப்போது தேர்தலுக்கான வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு என்று, விஜய் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சமீபத்தில் கூட கோவை சென்ற விஜய்க்கு ரசிகர்கள், தொண்டர்கள் என்று அனைவரும் உற்சாகம வரவேற்பு கொடுத்தனர். இதே போன்று ஜன நாயகன் படத்திற்காக கொடைக்கானல் சென்ற விஜய்க்கு மதுரை விமான நிலையத்திலும் ரசிகர்கள் படை சூழ வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜய் கோவை செல்வதாக இருந்தாலும் சரி, மதுரை செல்வதாக இருந்தாலும் சரி வெளியூர் பயணங்களுக்கு எல்லாம் தனி விமானத்தையே பயன்படுத்தி வருகிறார். அப்படி அவர் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் விலை மட்டும் ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தனி விமானத்தில் எல்லா வசதிகளும் இக்கிறதாம்.





















