மேலும் அறிய

Thalapathy 67 Cast: ‘தளபதி 67’ அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல்.. பேன் இந்தியாவில் கலக்கும் லோகேஷ் கனகராஜின் எல்சியு

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ள (Thalapathy 67 Full Cast Details) நடிகர், நடிகைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி:

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான மாஸ்டர் திரைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் அப்படத்தை தயாரித்திருந்தார்.  கொரோனா காலத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி இழுத்ததோடு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு நம்பிக்கையை கொடுத்தது. இதன் காரணமாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும்  புதிய படத்தில் இணைய உள்ளதாக நீண்ட காலமாக பேசபட்டது.

தளபதி - 67 அறிவிப்பு:

இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும்,  அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார்  தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் எழுத உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

வைரலான வீடியோ 

இதனிடையே, தளபதி 67 படத்தின் ஷூட்டிங்  படக்குழு சென்னை விமான நிலையத்தில் இருந்து காஷ்மீர் புறப்பட்டனர். இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. 

அடுத்தடுத்து வெளியான “தளபதி 67” அப்டேட்

இதையடுத்து, தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை உடனடியாக படக்குழுவே வெளியிட தொடங்கியது. அதன்படி, முதலாவதாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, பிரியா ஆனந்த், நடன மாஸ்டர் சாண்டி நடிகராகவும், இயக்குனர் மிஸ்கின், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இறுதியாக, தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அதைதொடர்ந்து, இன்றும் தளபதி 67 படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பான் இந்தியாவில் லோகேஷ் கனகராஜின் எல்சியு

திரிஷா உட்பட மேலும் பல முக்கிய திரைநட்சத்திரங்களும், தளபதி 67 படத்தில் இணைந்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகங்களில் நன்கு அறிமுகமான நடிகர்கள், தளபதி 67 படத்தில் இணைந்து உள்ளதால் இது பிரமாண்ட பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் எல்சியு-விலும் இந்த திரைப்படம் இணையும் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget