Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 22nd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

அரசு இன்று பேச்சுவார்த்தை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை.
தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் அரசு ஊழியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பேச உள்ளனர்.
உறுதிமொழி படிவம் கட்டாயம் - தேர்தல் ஆணையம்
சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்க்க உறுதிமொழி படிவம் கட்டாயம். உறுதிமொழி படிவம் என்பது 2002, 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற பெயர் (அ) பெற்றோர் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும்
புதிய உச்சத்தில் வெள்ளி
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 கூடி ரூ.231க்கு விற்பனை. 1 கிலோ வெள்ளி ரூ.2.31 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 கூடி 99 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தர்காவில் கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இந்துக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இவ்விழா ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும்.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா!
ஐதராபாத்: கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு. கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ வைரல். சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலும் இதே போன்ற ஒரு சூழலை சந்தித்த நிலையில், ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து.
பாஜக அமோக வெற்றி
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. மகாயுதி கூட்டணி 214 நகராட்சி, பஞ்சாயத்து இடங்களிலும், மகாவிகாஸ் அகாடி 50 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கால்நடைகள் ஏலம்
புதுச்சேரியில் சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பிடித்து பொது ஏலத்தில் விட நகராட்சி ஆணையர் உத்தரவு. உரிமம் பெற்று பாதுகாப்பான இடங்களில் வளர்க்காத கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை. சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை குறைக்கும் வகையில் தங்குமிடங்களில் வைக்கவும் உத்தரவு
ரூ.6 கோடி பரிசு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு
ஒருவர் வெள்ளி வென்றால் ரூ.4 கோடி. வெண்கலத்திற்கு ரூ.3 கோடி வழங்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
தோல்வி விரக்தி
துபாயில் போட்டி முடிந்த பிறகு இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயட்டை தாக்கிய அமெரிக்க வீரர் அந்தோணி டெய்லர். இந்திய வீரரிடம் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்ததால் விரக்தி
இந்திய அணி வெற்றி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 122 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை





















