Thalapathy 66 Update: ஸ்டைல் லுக்கில் விஜய்.. சிரித்துக்கொண்டிருக்கும் வம்சி .. வெளியானது தளபதி 66 அப்டேட்..!
நடிகர் விஜய் நடித்து வரும் 66 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து வரும் 66 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பு சென்னையில் நடந்த நிலையில், 2 ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த 23 ஆம் தேதி நடிகர் விஜய் ஹைதராபாத்திற்கு சென்றார். அங்கு படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வந்த நிலையில் அந்த படப்பிடிப்பு நடந்து தற்போது முடிந்துள்ளதாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளது.
View this post on Instagram
அந்த அப்டேட்டில், “ தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தபடப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.





















