Ram Charan to shankar | இயக்குநர் ஷங்கருக்கு கண்டிஷன் போட்ட ராம் சரண்.
இந்தியன் 2 முடிக்காமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களை இயக்கக்கூடாது இயக்குநர் சங்கருக்கு தடைவிதிக்க லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது என்பது நாம் அறிந்ததே. தற்பொழுது நடிகர் ராம் சரணும் இயக்குநர் ஷங்கருக்கு நிபந்தனை விடுத்துள்ளார் .
இந்தியன் 2' படப்பிடிப்பின் தாமதம், தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குநர் ஷங்கருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, மேலும் பல விசாரணைகளுக்குப் பிறகு நீதிபதி ஜூன் வரை இந்த வழக்கை ஒத்திவைத்து இருக்கிறார் . இப்போது, சமீபத்திய அறிக்கையின்படி, ஷங்கர் மற்ற மொழிப் படங்களை இயக்குவதற்கு தடைவிதிக்கக்கோரி மனுவில் வற்புறுத்தியுள்ளது லைகா புரொடக்ஷன்ஸ்.
'இந்தியன் 2' தயாரிப்பாளர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் எந்த ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டாம் உள்ளது என்றும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் தனது புதிய படத்தை ஷங்கர் முதலில் அறிவித்தார். , இது இந்திய மொழிகள் பலவற்றுக்குமான படமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. சூப்பர் ஹிட் தமிழ் படமான 'அந்நியன் ' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ரன்வீர் சிங்குடன் இணைந்தார் . இயக்குநரின் இந்த அடுத்த அடுத்த அறிவிப்புகள் சர்ச்சையைத் தூண்டின. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து இயக்குநரின் தற்போதைய படமான 'இந்தியன் 2' தயாரிப்பாளர்கள் சங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து ஷங்கர் மற்ற மொழி படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க கோரி மனுவில் வற்புறுத்தி, திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது . இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரண் ஷங்கர் படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது .இதனை சரிசெய்யும் வகையில் , நடிகர் ராம் சரண் எனது படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தை இயக்குவதாக உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று நிபந்தனை விடுத்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
இந்தியன் 2 ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லாமல் இருந்துவருகிறது. கமல் ஹாசன் நடிப்பில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் .
இந்தியன் 2' செட்டில் விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா பரவல் இன்னும் அதிகமாக படத்தின் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் லைகா, இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியுள்ளது.