Veera Serial : தீபாவளி பண்டிகையுடன் குதூகலமாக தொடங்கிய புது சீரியல் - வீரா முதல் எபிசோட் அப்டேட்
வீரா சீரியலின் முதல் எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் வீரா. இந்த சீரியலின் முதல் எபிசோட்டான இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. தீபாவளி பண்டிகை என்பதால் ஹீரோயின் குடும்பத்துடன் காட்சிகள் ஓபன் ஆகிறது.
அம்மா முறுக்கு சுட்டுக் கொண்டிருக்க பாண்டியனின் மூன்றாவது தங்கையான பிருந்தா அறிமுகமாகிறார். அதைத் தொடர்ந்து கண்மணி எங்கே என்று தேட கண்மணி ஒரு டைலர் கடையில் ஜாக்கெட்டை கொடுத்து அதை சரி செய்து தருமாறு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள்.
அதைத்தொடர்ந்து மூன்று தங்கைகளுக்கு அண்ணனான பாண்டியனின் இன்ட்ரோ காட்சிகள் ஒளிபரப்பாகிறது. ஆட்டோ ஓட்டுனர் பாண்டியன் ஆட்டோவில் வருபவரிடம் தன்னுடைய தங்கைகள் பற்றி பேசிக்கொண்டே வருகிறார்.
அதைத்தொடர்ந்து கதையின் நாயகியான வீரா தெருவில் உள்ள குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுத்து அவர்களுடன் சேர்ந்து வெடித்து சந்தோஷமாக இருக்க பாண்டியன் வீராவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பும்போது வழியில் ஒரு சவாரி கிடைக்க அந்த நபரை ராமசந்திரன் வீட்டில் டிராப் செய்துவிட்டு கிளம்புகிறார்.
பிறகு பாண்டியன் குடும்பத்தில் பூஜைக்கு ஏற்பாடுகள் நடக்க இங்கே ஹீரோவின் குடும்பம் இன்ட்ரோ தொடங்குகிறது. ராமச்சந்திரன் தனது மனைவி போட்டோ முன்பு நின்று வேண்டுதலை முடித்துவிட்டு வெளியே வந்து ஏரியாவில் உள்ள மக்களுக்கு தீபாவளியை கொண்டாட துணி பணம் ஸ்வீட் உள்ளிட்டவற்றை கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ராமச்சந்திரனின் மூத்த மகன் ராகவ்விடம் தனது கடையின் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். ராமச்சந்திரன் சகோதரி லட்சுமி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க இரண்டாவது மகன் கார்த்திக் அறிமுகமாகிறான். பேண்ட் சட்டையில் வரும் அவனை லட்சுமி போய் வேட்டி சட்டையில வாடா என திட்டி அனுப்புகிறார். அதைத்தொடர்ந்து ஹீரோ மாறன் எங்கே என லட்சுமி கேட்க ராமச்சந்திரன் முகம் மாறுகிறது.
அவ எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறானோ என ராமச்சந்திரன் வெறுப்பை கொட்டுகிறார். பிறகு இவர்கள் எல்லோரும் கடைக்கு கிளம்பி வர கடையின் வாசலில் மாறன் ஏரியா பசங்களோடு சேர்ந்து பறை இசைக்கு பக்காவாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க இதை பார்த்த ராமச்சந்திரன் முறைத்துக் கொண்டே கடைக்குள் செல்கிறார். மூத்த மகன் ராகவ்வுக்கு பொறுப்புகளை கொடுக்க குடும்பத்தோடு ஒட்டாமல் வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் மாறன் பதவிப்பிரமாணமா என கிண்டல் அடிக்கிறார்.
பிறகு ராமச்சந்திரன் வீட்டுக்கு கிளம்பியது அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் அத்தை லட்சுமியோடு சேர்ந்து பறை இசைக்கு ஆட்டம் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.